ஒற்றைத்தலைவலியைப்போக்க உகந்த எட்டு வழிமுறைகள்

ஒற்றைத்தலைவலியைப்போக்க உகந்த எட்டு வழிமுறைகள்

 

ஒற்றைத்தலைவலி என்பது ஏதோ வந்தோம் போனோம் என்பது போன்ற சாதாரணமான தலைவலி அல்ல. தாங்க முடியாத வலியும், உடல் அசதியும் உண்டாக்கும், ஒற்றைத் தலை வலி வந்துவிட்டால் எந்த ஒரு வேலையும் செய்யவேமுடியாது; ஓய்வெடுக்கவும் விடாது ஏன்?  பொறுத்துக்க கொள்ளவே  முடியாது.  இதற்கு ஒரு விடிவே  கிடையாதா என்று உங்களை ஒரு வழி செய்துவிடும் .

வலியைப்போக்கும் மாத்திரைகள் ஓரளவு அதன் தாக்கத்தைக் குறைத்தாலும் அவற்றால் பக்க விளைவுகள் ஏற்படவே செய்கின்றன. மற்ற உறுப்புகளுக்கு    தேவையில்லாத தொந்தரவுகளைத் தருகின்றன. அதுவும் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கும், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இவை தீங்கையே விளைவிக்கும் .

இவற்றையெல்லாம் படித்து நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்..நீங்களும் மற்றவர்களைப்போல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும்.ஏனெனில்,அதை அடியோடு போக்குவதற்கான இயற்கை வழிமுறைகள் இருக்கின்றன.அவற்றைக்காணும் முன்பு,ஒற்றைத்தலைவலிக்கான காரணங்களைக்காணலாம்.

ஒற்றைத்தலைவலிக்கான காரணங்கள் :

உங்களுக்கு ஒன்று  தெரியுமா?அட்லாண்டாவில் உள்ள தலைவலி ஆராய்ச்சி மையத்தில் தலைவலிக்கான முக்கியமான காரணம்,மனஇறுக்கமே என்று கண்டுபிடித்துள்ளனர்.மற்ற காரணங்களாவன: ஹார்மோன்களால் (65%), வாசனைகளால் (44%), ஒளிகளால்(38%) புகைகளால் 36%),வெப்பத்தால் (30%),உணவுகளால் (27%). மக்னீஷியம், கால்ஷியம் போன்றவற்றின் குறைபாடுகளாலும்கூட ஒற்றைத்தலைவலி ஏற்படக்கூடும். எனவே, மேற்படி காரணிகளை ஆராய்ந்து அவற்றைப் போக்கத் தேவையான வழிமுறைகளைக் கண்டுபிடித்து, ஒற்றைத்தலைவலி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் . 

ஒற்றைத்தலை வலியைப்போக்க,இயற்கையான வழிமுறைகள் :

கீழ்கண்ட எளிமையான முறைகளைக்கையாண்டு. ஒற்றைத்தலைவலி வராமல் தடுத்துக்கொள்வோமாக.

1.தியானம் செய்தல் :

Description: Meditation for migraine

நீங்கள் ஒரு பெண்மணியாக இருக்கும் பட்சத்தில் பருவ மாற்றங்களால் ஏற்படும் ஹார் மோன்களின் காரணமாக ஒற்றைத்தலைவலி ஏற்படக்கூடும் .ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கான வாய்ப்பு மூன்று மடங்காகும், மாதவிடாய் காலங்களிலும் அல்லது பிரவசத்திற்குப்பிறகும் இதனால் துன்புறுகிறீர்களா? கவலையே படாதீர்கள். உங்கள் உடலிலுள்ள சக்தி சக்கரங்களையும்,சக்தி புள்ளிகளையும் சமன்படுத்தக்கூடிய அற்புதமான தியானம் இருக்கிறது.

"பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அருளிய "ஹரி ஓம் தியானம்" செய்தால் இதற்கான எளிய தேர்வு நிச்சயம் கைகூடும்.தாறுமாறான ஹார்மோன்களின் சுரப்பை ஒழுங்குபடுத்தி சமநிலைப் படச்செய்கிறது. ஆனால், இந்த தியானத்தை இடைவிடாமல் பழக வேண்டும்",என்று ஆயர்வேத மருத்துவரும் நாடிப்பரீட்சை  வல்லுநருமான டாக்டர்  சிக்ஷா தாகூர் கூறுகிறார் .

குருஜி அருளியுள்ள சாந்தி தியானம் மன இறுக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கான அற்புதமான தீர்வாகும். அது உங்களை  ஓய்வுறச்செய்து குணப் படுத்தும்.ஒற்றைத்தலைவலியை ஏற்படுத்தக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.தியானம் செய்வதால்,மருந்துகளால் ஏற்படுவதைப்போன்ற எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை.வயது,இனம்  என்ற எந்த ஒரு பாகுபாடுமின்றி எல்லோருமே தியானம் பழக முடியும். தியானமானது,உனது ரத்த நாளங்களை இளகச் செய்கிறது. வலியை சகிக்கக்கூடிய நிலையை உயர்த்தி நமது உடல் நலனை மேம்படச்செய்கிறது .

2. பதப்படுத்தப்பட்ட உணவுகளைவிட புரதச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

சத்தான உணவுகளை நீங்கள் தவறாமல் சேர்த்துக்கொள்கிறீர்களா? Description: Avoid processed food

அல்லது நொறுக்குத்தீனி வகைகளால் உங்கள் வயிற்றை  நிரப்பிக்கொள்கிறீர்களா?

மூன்று வேளையோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளையோ சாப்பிடுவதைப் பழகிக்கொள்ளுங்கள். இவ்வகையில் சத்தான உணவுகளை நேரம் தவறாமல் சாப்பிடுவது ஒற்றைத்தலைவலி திடீர் திடீரென்று வருவதைத்தடுக்கும் 

நீங்கள் உண்ணும் உணவுகளைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சாக்லேட், திராட்சை ரசம்,பாலாடை,பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஈஸ்ட் கொட்டை வகைகள், ஊறுகாய்கள், நிலக்கடலை எண்ணெய்  முதலானவைகளைத் தவிர்க்கவும். நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது .

3. ஒற்றைத் தலைவலி நிவாரணத்திற்கு உடற்பயிற்சிகள் :

தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது சாலச்சிறந்தது,உடற்பயிற்சி செய்வது மன இறுக்கத்தைக் குறைத்து,உடலில் வேதியல் நிலைகளை சமன்படுத்தி, உடலின் இயக்கத்தை சீராக்குகிறது.

பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் நடைப் பயிற்சியும், கோமுகாஸனா,வீரபத்திராசனா போன்ற எளிய யோகாசனங்களை செய்வது நல்லது. உங்கள் கழுத்துப் பகுதிக்கு பாதிப்பைத்தரும் உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.

மேலும் சில யோகாசனங்கள்

4. தூக்கம்

நீங்கள் வலியால்  அவதியுறும்போது அமைதியான இருட்டான அறையில் தூங்குவது இதமாக இருக்கும். தினந்தோறும் தவறாமல் கொஞ்சம் சீக்கிரமாகவே தூங்கச்செல்வது நல்லது. இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் தூங்குவது நல்லது என்று டாக்டர் சிக்ஷா கூறுகிறார்.

தியானம் செய்வது தூக்கத்தின் தன்மையை  மேம்படுத்தும் என்பதை பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள முற்படுங்கள் .

5. வேலை பளு உங்களை வெட்டிச்சாய்க்குமுன் உங்களைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள்

உங்கள் சக்திக்கு மீறி உழைக்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கடைசியாக நீங்கள் எப்போது ஜாலியாக விடுமுறையை அனுபவித்தீர்கள்? குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ அல்லது நீங்கள் மட்டுமோ விஸ்ராந்தியாக விடுமுறை எடுத்துக்கொண்டு ஓய்வாக தளர்ச்சியாக இருங்கள். அழகுடனும், அமைதியுடனும் திகழும் பெங்களூருவில் இருக்கும் வாழும் கலை ஆசிரமத்திற்கு வாருங்கள். பரந்தவெளியில் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல் ஒற்றைத் தலைவலியை போக்கிக்கொள்வதற்கான பயிற்சிகளையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம் . 

6. நிலைகுலைந்து  போவதற்குமுன் ஓய்வாக இருக்கப்பழகுங்கள்

வருமுன் காப்போம் என்பதை உணர்ந்து ஓய்வும்  இளக்கத்தையும் தரும் சுதர்சன கிரியாவைப் பயிலுங்கள். இது ஒரு அற்புதமான, மன இறுக்கத்தைப் போக்கக்கூடிய மூச்சுப்பயிற்சியாகும். ஒற்றைத்தலைவலியைப் போக்கும் ஒரு அற்புதமான சிகிச்சை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை ஓய்வுறச்செய்து, ஸ்ட்ரெஸ் ஹார் மோன்களை சமநிலைப்படுத்துகிறது ஓற்றைத் தலைவலியால் அவதிப்படுவோரில் 80%ஸ்ட்ரெஸ் ஹார்மோன் நிலைகுலைப்பட்டாலேயே துன்புறுகின்றனர் .

சுதர்சன கிரியாவைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் .

சுதர்சன கிரியா செய்வதற்கு முன்பு ப்ரம்மரி பிராணாயாமா செய்வது மிக மிக நல்லதாகும். ஏனெனில் ,அது செரோடினின் என்ற ஹார்மோனை சுரக்கவைக்கிறது. மாதவிடாய் பின்னும் பிரசவகாலங்களில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியைப்போக்க உதவுகிறது ."ஒற்றைத்தலைவலியால் உடனடியாக பாதிக்கப்படக்கூடிய சுவாசக்குழாயின் மேல்பகுதியை ப்ரம்மரி பிராணாயாமா, இதமளித்தது குணமாக்குகிறது "என்று கூறுகிறார் டாக்டர் . சிக்ஷா.   

7. உடலில் தேங்கும் நச்சுப்பொருள்களை நீக்குதல்

நல்ல ஆரோக்கியத்தை உணர, நமது உடலைப் பேணிக்காத்தல் அவசியமாகும் இறுக்கமாகி விட்ட  உடலை இளக்கமுறச்செய்ய, உடல் முழுதுக்குமான மசாஜ் செய்தல் பயனுள்ளதாகும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் நச்சுப்பொருள்களும் வெளியே வந்துவிடும். இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள வாழும்கலை பஞ்சகர்மா நிபுணர்கள் உடல் இறுக்கத்தைப் போக்குவதற்கான, தக்க சிகிச்சை தர உதவுவார்கள். வாமனா, வீரேசனா போன்ற பிரத்தியேக சிகிச்சைகள் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை நீக்கும். ஆண்டுக்கொருமுறை இவற்றை செய்து கொள்வதால் உடல் பூரண ஆரோக் கியத்துடன் இருக்கும்.

8.பயத்திற்கு விடை கொடுங்கள்

ஏற்கனவே வலியினால் பட்ட அவதியின் பயம் நமக்குள் இருந்து கொண்டேயிருக்கும். மறுபடியும் ஒற்றைத் தலைவலி வருவதற்கு அதுவே காரணமாகிவிடுகிறது.அங்கே நமது மனமே நம்மை பயமுறுத்துகிறது.வலி வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று மனத்தை மெல்ல பயிற்றுவியுங்கள். மற்ற நேரங்களில் நிம்மதியாகத் தூங்குங்கள். ஓய்வாக இருங்கள். மனத்தை சரியான முறையில் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.

தியானத்தின் மூலம் பயத்தை போக்கிவிட முடியும்.

மருந்துகளைவிட மேலானது தியானமென்னும் அருமருந்து .

"ஒற்றைத் தலைவலியைப்பற்றி நான் இப்போதெல்லாம் கவலைப்படுவதேயில்லை” என்று கூறுகிறார் குருதத் அன்வேகர். குருதத் அன்வேகர் ஒரு கிராபிக் டிசைனராக வேலை பார்க்கிறார். ஒரு நாளில் பெரும்பகுதியான நேரம் கணினியின் மூலம் வேலை செய்யவேண்டிய கட்டாயம். அதன் திரையின் ஒளி ஒற்றைத்தலைவலியை உண்டாக்கக்கூடியது. இருந்தாலும் அவரை பாடாய் படுத்திய ஒற்றைத் தலைவலி கடந்த  ஒரு மாதமாக வரவேயில்லை .

"திரையின் ஒளியைப்பார்த்தாலே, எனக்கு ஒற்றைத்தலைவலி வந்துவிடும். ஆனால் இப்போதெல்லாம் கணினியின் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் என்னால் வேலை செய்ய முடிகிறது. சுதர்சன கிரியா பயின்று தியானம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஒற்றைத் தலைவலியின் தாக்கம் கணிசமாக குறைந்துவிட்டது. முன்பெல்லாம் வாரத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஒற்றைத்தலைவலி வந்துவிடும்.அது இப்போது, இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாகக் குறைந்துவிட்டது" என்று சந்தோஷமாகக் கூறுகிறார் குரு !

ரஜாக் ரஹ்மான் என்னும் பத்திரிகையாளர்,ஒற்றைத்தலைவலியால் மிகவும் அவதிப் பட்டார். இப்போது அவர் தவறாமல் சுதர்சன கிரியா பயிற்சி செய்து வருகிறார். "நான் சுதர்சன கிரியா செய்ய ஆரம்பித்துப் பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஒற்றைத்தலைவலி வந்தும் பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன!" என்று புன்முறுவலுடன்  கூறுகிறார் .          .

 

Get to learn Meditation