மட்டு மீறிய உடல் பருமனைக் குறைக்க யோகா (Yoga for obesity in tamil)

அழுத்தம் மிக்க வாழ்க்கை முறையின் காரணமாக நாம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பல உடல் நலப் பிரச்சினைகளில் மிகவும் தீங்குள்ளது மட்டு மீறிய உடல் பருமன் ஆகும் . உடலில் கொழுப்புச் சத்து குவிக்கப் பட்டு சேமிக்கப் படும் இந்த நிலையில் மாரடைப்பு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

மட்டு மீறிய உடல் பருமன் என்றால் என்ன?

உலகச்சுகாதார அமைப்பின் குறிப்பேடுகளின் படி, உலகெங்கும் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 1980 லிருந்து இரு மடங்காகி விட்டது. இந்த எண்ணிக்கை உங்களுடைய உடல் நலனைப் பற்றிய கவலையை ஏற்படுத்துகின்றதா? பயப்படுவதற்கு முன்னர் நீங்கள் மட்டு மீறிய அளவில் இல்லாமலும் இருக்கலாம் என்று புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் மட்டு மீறிய பருமன் என்பது அதிக எடையிலிருந்து வேறுபட்டது ஆகும். உடல் நிறை குறியீட்டு எண் என்பது 25 அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால் அதிக எடை என்று வகைப் படுத்தப் பட்டுள்ளது. உடல் நிறை குறியீட்டு எண் 30க்கு மேல் இருந்தால் அது மட்டு மீறிய உடல் பருமன் என்று வகைப் படுத்தப் பட்டுள்ளது.

இதிலிருந்து விடுபடும் வழி என்ன?

நீங்கள் எந்த வகையில் இருந்தாலும், இருவகையினரும், சில தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வாறு மட்டு மீறிய உடல்பருமனைச் சமாளிப்பது என்று புரியாமல் இருந்தால், நீங்கள் சரியான இடத்திலேயே இருக்கின்றீர்கள். மட்டு மீறிய உடல்பருமனைக் குறைக்க உடலுக்குக் கெட்டனவற்றை அகற்றி, நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் நல்ல ஆரோக்கிய உணவை எடுக்கின்றீர்களா, உடற் பயிற்சி செய்கின்றீர்களா என்று கவனியுங்கள். ஜிம் செல்வது உங்களுக்கு பிடிக்க வில்லையெனில், இயற்கை முறையான யோகா செய்யுங்கள்.

இயற்கையாக உங்கள் உடல்நலனை மீட்டுக் கொள்ளுங்கள்

யோகா ஒரு பழமையான செயல்முறை. முழுமையான வாழ்க்கைக்கும் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கும் உணவுப் பழக்கங்களுக்கும் சீரான உடல் நிலைக்கும் உதவும் நோக்கமுடையது. முற்றிலும் தீமையற்ற பல வேறு தோற்றப் பாங்குகளில் மூச்சினைக் கட்டுப் படுத்தும் யோகா இயற்கை செயல்முறையானது ஆகும். உடல் எடையைக் குறைக்க எடுத்துக் கொள்ளப் படும் ஆங்கில மருந்துகளுக்கு இது ஒரு மிகச் சிறந்த மாற்றாக அமைகின்றது. உங்கள் எடையைக் குறைக்க சில யோகப் பயிற்சிகள் இதோ:

இந்த மூச்சுப் பயிற்சி, ஜீவத்துவ பரிணாமத்தினைக் கூட்டி,எடை குறைய உதவுகின்றது. ஜீரணப் பாதையின் செயல்முறை ,சத்துக்கள் உறிஞ்சப் படுதல், உட்கிரகிக்கப்படுதல் ஆகியவற்றுக்கு உதவுகின்றது.

இது அடி வயிற்று மற்றும் இடுப்புப் பகுதிகளில் உள்ள உறுப்புக்களை மசாஜ் செய்கின்றது. ஜீரணத்தை மேம்படுத்துகின்றது. மட்டு மீறிய உடல் பருமனைக் கட்டுப் படுத்துகின்றது.

 

உடலின் மைய நிலையைப் பாதுகாத்து வலிமையைக் கூட்டுகின்றது. அடிவயிற்று உறுப்புக்களும் இந்த ஆசனத்தினால் ஊக்குவிக்கப் படுகின்றன.

தண்டாசனா

அடிவயிற்றுத் தசைகளை சீராக்கி, உடலின் மேற்பகுதி மணிக்கட்டுகள் ,கைகள் ஆகியவற்றையும் வலுப்படுத்துகின்றது.

 

குடலையும் அடி வயிற்றுப் பகுதி உறுப்புக்களையும் நீட்டுவித்து, சீராக்குகின்றது.

அடி வயிற்றுப் பகுதி தசைகளை வலுப் படுத்துகின்றது. ஜீரணத்தை மேம்படுத்துகின்றது. குடலை ஊக்குவிக்கின்றது.

 

அடி வயிற்று உறுப்புக்களை சீராக்கி ஜீரணத்தையும் உடல் நெகிழ்வினையும் மேம்படுத்துகின்றது.

அடி வயிற்று தசைகள் ஊக்குவிக்கப் பட்டு வலுவடைகின்றன.அழுத்தம் மற்றும் களைப்பினைப் போக்குகின்றது.

 

மாறுபடும் வாழ்க்கை முறை

நல்ல வாழ்க்கை முறை ஏற்கப்பட்டால் உடல் பருமனைக் குறைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மேம்படும்.யோகாவினைத் தவிர ஆயுர்வேத முறையும் எடையைக் குறைக்க உதவும். யோகாவின் சகோதரி என்று அழைக்கப் படும் ஆயுர்வேதம் யோகாவைப் போன்றே பழமையானது. இயற்கை மற்றும் மூலிகை மருந்துகள் அடங்கிய இம்முறை உடல் நலனுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகின்றது. ஆயுர்வேத சமையல் முறை உடல் எடையைக் குறைக்க நாக்குச் சுவையினை இழக்கும் கசப்பான அனுபவமாக மாறாமல் உறுதியளிக்கும்.

உங்கள் எல்லைகளை மதியுங்கள்

யோகா உடனடியாக எடைக் குறைப்பினைச் செய்யாது. ஆனால் நீண்டகாலப் பயனைத் தரும். ஆரம்பத்தில் நீங்கள் உடல் எடை குறைவதைக் காணவோ உணரவோ முடியாது, ஆனால் உங்களுக்குள் சுறுசுறுப்பையும் ஜீவன் மேம்படுவதையும் உணருவீர்கள். படிப்படியாக உடல் இதற்கு இசைந்து நல்ல உருவத்தினை அளிக்கும். பொறுமை தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .நம்பிக்கை இழக்காதீர்கள். உங்கள் யோகா ஆசிரியரைக் கலந்து ஆலோசியுங்கள். உங்கள் எடை குறைய உங்களுக்கென்று தொகுக்கப்பட்ட பயிற்சிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் அமைதியான மற்றும் வரவேற்கும் மனதிற்கு அடிகோலும். சிறந்த உடலமைப்பு மட்டுமின்றி நம்பிக்கையையும் அளிக்கும். உடல் நல அபாயங்களிலிருந்து விடுவித்து, வாழ்க்கையை அனுபவிக்க வழி செய்யும். உடலில் தீயனவற்றை அகற்றும். எடையும் குறைந்து உடல்நலமும் பெற சிறந்த செயல் முறையாக விளங்குகின்றது ஆகவே யோகா பாயை விரியுங்கள். உடல் பருமனைக் குறைக்க இயற்கை முறையைத் தேர்ந்தெடுங்கள்.

 

யோகப் பயிற்சி உடலையும் மனதையும் ஊக்குவித்து ஏராளமான உடல்நல பயன்களை அளிக்கின்றது. ஆயினும் இது மருந்துகளுக்கு மாற்று அல்ல. தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகா பயிற்சிகளைக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். காணவும்வாழும் கலை யோகா பயிற்சிஅருகில் உள்ளவாழும் கலை மையம் பயிற்சிகளை பற்றிய உங்களுக்கு தேவையான தகவல் அல்லது கருத்துகளை பகிர்ந்து கொள்ள? எங்களுக்கு எழுதுங்கள் info@artoflivingyoga.org