ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தியானம் செய்யுங்கள்(How to live a healthy lifestyle in tamil)

என்னுடைய வாழ்க்கை ஆரோக்கியமானதா என்று எப்படி எனக்குத் தெரியும்? என்னுடைய ஆரோக்கிய வாழ்வின் ஈவு எவ்வளவு? அதை எவ்வாறு நான் மேம்படுத்துவது? இது நம்மில் பலரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில் எண்ணி அதிசயிப்பது அல்லவா? நீங்கள் எவ்வாறு வாழ்கின்றீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கைப் பாணியை நிர்ணயிக் கின்றது.

உங்களுடைய ஆரோக்கிய வாழ்விற்கு ஏதோ ஒன்று நிச்சயம் உதவும். பலரும் பகிர்ந்து கொள்ளும் அது, தியானம். எனவே ஆரோக்கிய வாழ்வின் பல அம்சங்களையும் தியானம் எவ்வாறு அவற்றுக்கு உதவும் என்பதையும் பார்ப்போம்.

#1 ஆரோக்கிய உணவு

யோசிக்க வேண்டிய விஷயம்:

எவ்வளவு அடிக்கடி என் உணவில் ஆரோக்கியமான வகைகள் இருக்கின்றன? என்னுடைய உடலுக்குத் தேவையானதை விட அதிகம் அல்லது குறைவாக உண்கின்றேனா?

சரி! உணவு ஆற்றலுக்குத் தேவையான ஒன்று. சரியான அளவு சரியான வகை உணவை சரியான நேரத்தில் உண்பது உங்களுடைய உடல் நலனுக்குப் பெரிதும் உதவும். பெரும்பாலும் நாக்கு ருசிக்கு ஈடுகொடுத்து, ஆரோக்கியமில்லாத உணவினை ஏற்றுக் கொள் கிறோம். பலர் தியானம் செய்வதால், ஆரோக்கிய உணவு எடுத்துக் கொள்வது எளிதாக உள்ளது என்று கருதுகின்றார்கள்.

மேக்னா " சீரான தியானப் பயிற்சியால்,என் உடல் இயற்கையாகவே ஆரோக்கிய உணவினையே கேட்கின்றது. முன்னை விட இப்போது ஆரோக்கிய உணவினை அதிகம் எடுத்துக் கொள்வதை உணருகின்றேன்." என்று கூறுகிறார்.

அசைவ உணவினை அதன் தீய விளைவுகளை உணர்ந்தும் நான் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஓராண்டு ஒழுங்கான மூச்சுப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிக்குப் பின்னர், எனது அசைவ உணவு விருப்பம் படிப்படியாக வீழ்ந்து விட்டது.என்று கூறுகிறார், நிகேஷ்.

 

 #2 உறக்கத்தின் தரம் மற்றும் அளவு

யோசிக்க வேண்டிய விஷயம்

நீண்ட நேர உறக்கத்திற்குப் பின்னர் காலையில் எழுந்தவுடன் மிகவும் களைப்பாக உணருகின்றேனா? சுமார் எத்தனை மணி நேரம் தூங்குகின்றேன்?

மிகவும் களைப்பாக உணரும்போது முதலில் வரும் எண்ணம் என்ன? சற்று நேரம் தூங்கினால் பரவாயில்லை என்பது தான்.அல்லவா? சரி, தேவையான அளவு தூக்கத்திற்குப் பின்னரும் (7-8 மணி நேரம்) உங்கள் தூக்கத்தின் தரம் என்ன என்பது உடல் நலத்திற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய அம்சம்.

<strong>தியானம்</strong> உங்கள் தூக்கத்தின் தரத்தினை உயர்த்துகின்றது. எவ்வாறு? சரியான தூக்கமின்மைக்கு காரணங்களில் ஒன்று அழுத்தம். அழுத்தம் விளைவிக்கும் ஹார்மோன்கள் தியானத்தின் மூலம் குறைகின்றன. இதன் விளைவாக மனதில் ஒரு சாந்தமான விளைவு தோன்றுகிறது.தூக்கம் மேலும் ஆழ்ந்தும் ஒய்வுள்ளதாகவும் அமைகின்றது.

#3 சுறுசுறுப்பாக இருங்கள்

யோசிக்க வேண்டிய விஷயம்

எவ்வளவு அடிக்கடிஎன் உடலும் மனமும் களைப்படைந்து விடுகின்றன? இயல்பாக ஒரு நாளில் எவ்வளவு நேரம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்?

ஒரு நாளில் செய்ய வேண்டியது அதிகமாக உள்ளன அல்லவா? அனைத்தையும் நம்மால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறோம். சில நாட்களில் இயல்பாகவே சுறுசுறுப்பாக இருக்கிறோம், சில நாட்களில் சோம்பலாகி விடுகிறோம். ஒழுங்காக தியானம் செய்பவர்கள், தியானம் அவர்களை சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும் நாள் பூராவும் வைத்திருக்கிறது என்று கூறுகின்றனர். களைப்பு மற்றும் சோர்வு ஏற்பட்டாலும் சில நிமிஷ நேர தியானம் அவர்களை மீண்டும் சுறுசுறுப்பாக்கி விடுகின்றது.

“நான் கடந்த நான்கு ஆண்டுகளாக தியானம் செய்து வருகிறேன். சில நேரங்களில் என்னுடைய பணித்திறன் என்னையே வியப்படைய வைக்கின்றது. என்னுடன் பணி புரிபவர் கள் எவ்வாறு நான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று கேட்கின்றனர். அதன் ரகசியம் தியானம்தான் என்பதைப் பகிர்ந்து கொள்கின்றேன்." என்கிறார் கமனா நாத்.

 

#4 உங்களைத் தளர்த்திக் கொள்ள தேவையான நேரம்

யோசிக்க வேண்டிய விஷயம்

ஒவ்வொரு நாளும் எனக்குப் பிடித்த விஷயங்களை செய்து என்னைத் தளர்த்திக் கொள்ள எவ்வளவு நேரம் செலவழிக்கின்றேன்?

உங்கள் மனதையும், உடலையும் இளைப்பாற்றிக் கொள்ளும்போது உங்கள் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை அறிந்திருக்கிறீர்களா ? ஆனால் பெரும்பாலும் நேரம் இல்லை ஆனால் பணி நிறைய உள்ளது என்று புகார் செய்கிறோம். அல்லவா? உங்களைத் தளர்த்திக் கொள்ள சிறந்த வழிகளில் ஒன்று தியானம். கண்களை மூடி 20 நிமிட நேரம் அமர்ந்திருப்பது உங்கள் மனதை சாந்தப் படுத்தி, அமைதியாக்குகின்றது.

தியானத்துடன் கூட, ஒரு விருப்ப வேலையையும் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக புத்தகம் படிப்பது, நாயுடன் விளையாடுவது போன்றவை. இப்போது நல்ல செய்தி என்னவென்றால், தியானம் உங்களுடைய பணியில் உங்களை வல்லவராக்குகின்றது. விரைவில் பணியினை முடித்து, அதிக ஒய்வு நேரத்தினைப் பெற முடிகிறது.

“வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தால் சலிப்படைந்து களைப்படைந்து விடுவேன். ஆனால் தியானம் செய்வதால், சலிப்புக் குறைந்து என் வேலையையே நான் விரும்பிச் செய்கிறேன்” என்கிறார் பிரான்சிஸ்கோ .

 

#5 பணியில் மகிழ்ச்சி

யோசிக்க வேண்டிய விஷயம்

ஒவ்வொரு நாள் காலையும் பணி நாளை உண்மையாகவே வரவேற்கின்றேனா அல்லது "அடக் கடவுளே! பணியில் இன்னொரு நாளா?" என்று அலுத்துக் கொள்கின்றேனா ? இதை யோசித்துப் பாருங்கள்.

எப்போது நீங்கள் பணியினை விரும்பிச் செய்கிறீர்கள்? பணி உங்களுக்கு விருப்பமான துறையில் இருந்தால், ஒருவேளை நீங்கள் விரும்பிச் செய்யலாம். அதுவும் நீங்கள் உங்களுடைய முழுமையான திறனை அளிக்க முடிந்தால்தான். இது ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறது, அந்த திருப்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

எவ்வாறு உங்கள் முழுத்திறனை அளிக்கின்றீர்கள்? ஒரு விடை- தியானம். இதன் சூத்திரம் மிக எளியது. தியானம் கவனத்தை அதிகரிக்கின்றது. கவனம் செயல்திறனைக் கூட்டுகின்றது, செயல்திறன் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, நல்ல பயன்கள் பணியில் திருப்தியை ஏற்படுத்துகின்றன.

#6 நல்ல சமூக நலன்

யோசிக்க வேண்டிய விஷயம்

எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? அவர்களுடன் எனக்கு என்ன விதமான உறவு இருக்கின்றது? என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றதா? குறைகின்றதா?

"மனிதன் ஓர் சமூக விலங்கு "என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆம், நமது சமூக நலன் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான ஆக்கக் கூறு ஆகும். இது நாம் மக்களுடன் எவ்வாறு பழகுகிறோம் என்பதைப் பொறுத்திருக்கின்றது.நம்முடைய சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நம்மைச் சுற்றி மக்கள் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா?அப்போது, முக்கியமாக தேவையான நேரங்களில் சமூக வட்டத்தில் சார்ந்திருக்க முடியும்.

எவ்வாறு ஒரு நல்ல சமூக வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வது?நட்புடன் இருப்பது நம் இயல்பு. இந்தப் பண்பை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். தியானம் பிறரை கூருணர்வுடன் அறியவும், ஏற்றுக் கொள்ளவும் வைத்து, நமது தொடர்பு பண்புகளையும் வெளிப்படுத்தல் திறனையும் மேம்படுத்துகின்றது. இந்த அனைத்துக் குணங்களுடன், நாம் உயர்வுடன் நம்மைப் பிணைத்துக் கொண்டு நல்லுறவுகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

#7 நோய்கள் குறைவு

யோசிக்க வேண்டிய விஷயம்

எவ்வளவு அடிக்கடி நான் உடல் நலமின்றி இருக்கிறேன்?

தியானம் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்துகின்றது.அதனால் உடல்நலமின்மை குறைகின்றது. அதே சமயம், நீங்கள் நோயுற்றால், தியானம் குணப்படுத்துதலை துரிதப் படுத்துகின்றது.

தியானக் குறிப்புகள்

நம் அனைவருக்குமே நலமான வாழ்வுதான் விருப்பம் அல்லவா?

  • மேலே கூறப் பட்டுள்ள விஷயங்களைப் பற்றி சிந்தனை செய்யுங்கள் தியான அனுபவத்தினால் ஏற்படும் நேர்மறையான விளைவுகளை அறிய இவை உதவும்.
  • தினமும் குறைந்த பட்சம் ஒரு முறை தியானம் செய்தல் நல்லது. நீங்களேயோ அல்லது ஒரு வல்லுனரிடம் கற்றோ துவங்கலாம். வல்லுநர் நீங்கள் ஆழ்ந்த அனுபவத்தை அடைய உதவுவார்.
  • உங்கள் நண்பருடன் இணைந்து தியானம் செய்யலாம். நண்பர்களுடன் செய்யும் குழு தியானம் உங்களை ஒழுங்காக தியானத்தில் ஈடுபட வைக்கும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஞான உரைகளின் தூண்டுதலால், திவ்யா சச்தேவினால் பாரதி ஹரீஷ் அவர்களின் குறிப்புக்களை உள்ளடக்கி எழுதப் பட்டது.