உங்களை விழித்திருக்க வைப்பது எது? (Meditation for better sleep in tamil)

படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டே உறக்கத்திற்காகக் காத்திருக்கின் றீர்களா? எந்த முயற்சியுமின்றி எளிதாக உறங்க வழி ஏதேனும் உள்ளதா என்று அதிசயித்துக் கொண்டிருக்கின்றீர்களா?

நல்லது, அமைதியான உறக்கத்திற்கு ஓர் எளிய ரகசியம் இருக்கின்றது. தியானப் பயிற்சியினை உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டால் எவ்வாறு அனைத்தும் மாறுகின்றன என்று பாருங்கள்.

ஆனால் அதற்கு முன்னர் உறக்கமின்மைக்கு என்ன காரணங்கள் என்று பார்ப்பது நல்லது.அதிக வேலையினால் ஏற்படும் அழுத்தம், நோய், உணவு, சரியான உறக்கப் பழக்கங்களின்மை,உணர்ச்சிகளின் தாக்கம், ஒலியின் பாதிப்பு ஆகிய எது வேண்டுமானாலும் காரணமாகலாம்.

அழுத்தம் அல்லது களைப்பு இருந்தால், தியானம் உங்கள் மனதையும் உடலையும் அமைதிப் படுத்தி, அழுத்தத்தின் விளைவுகளைக் குறைத்து, ஓய்வினை அளிக்கும்.

உங்கள் மனம் பரபரப்பாக இருப்பதால் பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க இயலவில்லையானால் தியானம் உங்கள் மனதைச் சற்று மெதுவாக்கி உள்ளே ஆழ்ந்திருக்கும் பிரச்சினைகளை வெளிக் கொணரும்.மேலும் மேலும் தியானத்தில் ஆழும்போது, உறக்கமின்மையைத் தவிர்க்கும் கருவி மட்டுமில்லை, அதை விட மேலானது என்பதை அறிவீர்கள். தியானமும் உறக்கமும் நெருங்கிய தொடர்புடையவை.

உள்ளுணர்வு விழிப்பு தியானப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் பரிசாகும்.மனதில் பல விஷயங்கள் வந்து போய்க் கொண்டிருக்கும். தியானம் செய்யும் பாதுகாப்பான சூழலில் மனபதிவுகள் வெளிவரும். அது நம்மைப் பிரதிபலிக்கும் கருத்துக்களாக நாம் பயன்படுத்தி, ஏன் உறக்கம் சரியாக இல்லை என்பதன் காரணங்களைக் கண்டறியலாம்.

சிந்திக்க சில விஷயங்கள்....

#1 உங்கள் உறக்கப் பழக்கங்கள் யாவை? ஒரு ஒழுங்கான நேர அட்டவணை உள்ளதா? பகலில் உறங்குவீர்களா? உங்கள் உறக்கத்தின் தரம் என்ன? எவ்வளவு நேரம் உறங்குவீர்கள்?

ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வதும், ஒரே நேரத்தில் காலையில் எழுவதும் உங்கள் உடலின் இயற்கையான உரக்க விழிப்பு சுழற்சிக்கு இயைந்ததாக இருக்கும்.சுமார் 6முதல் 8 மணி நேரம் வரையில் உறங்க வேண்டும்.ஆகவே ஒழுங்கான உறக்க நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.பகலில் தூங்குவது இரவில் தூக்கமின்மையை அதிகரிக்கும். எனவே அதைத் தவிர்த்து விடுங்கள். அது கட்டாயம் என்றால் குறைந்த நேரமாக இருக்கட்டும்.

20 நிமிஷ தியானம் 8 மணி நேர உறக்கத்திற்கொப்பான ஓய்வினை அளிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்களே பயிற்சி செய்து முயன்று பாருங்கள், உங்களுக்கே அந்த வித்தியாசம் தெரியும்.20 நிமிஷ கண் மூடித் தியானம் செய்த பின்னர் ஓர் மலர் போன்று புத்துணர்வு மட்டுமல்ல, உங்கள் தூக்கத்திலும் உயர் தரத்தினைக் காண்பீர்கள்.

#2 அதிக நேரம் வேலை செய்கிறீர்களா? தேவையான அளவு உடற்பயிற்சி உள்ளதா? உங்கள் பிரச்சினை மன களைப்பா அல்லது உடலிலா? உங்களால் இளைப்பாற முடிகின்றதா அல்லது கேளிக்கைகள்தாம் உங்களது இளைப் பாறலா?

உறக்கமின்மைக்கு என்ன காரணம் ஆயினும் தியானமும் இளைப்பாறலுமே உங்கள் ஆற்றலைச் சமப் படுத்துவதற்க்கான சாவிகள் ஆகும்.சற்று நேரம் செய்யும் தியானம் உங்கள் உறக்கமின்மையால் ஏற்படும் நஷ்டத்தைச் சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆற்றலையும் பாது காக்கின்றது.நீங்கள் விழித்திருக்கும் நேரம் இளைப்பாறியும்,.உங்கள் உறக்க நேரம் தரமானதாகவும் இருக்க வைக்கின்றது.இளைப்பாறக் கற்றுக் கொண்டு தியானம் செய்வதே உறக்கமற்ற இரவிலிருந்து நல்ல உறக்க இரவிற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

உங்கள் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினைக் கொண்டு வர, ஒழுங்காகச் செய்யப் படும் தியானமே மிகச் சிறந்த வழியாகும். காலையில் குளித்து, காலியான வயிற்றுடன் தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள் பகல் உணவிற்கு முன்போ அல்லது இரவு உணவுக்கு முன்போ  தியானம் செய்யுங்கள்.

#3 பின்னிரவில் எடுத்துக் கொள்ளும் பலகாரங்கள் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கின்றதா? உங்களது உணவு நேரத்தினை மாற்றிக் கொள்ள முடியுமா? எந்த வகையான உணவினை எடுத்துக் கொள்கின்றீர்கள்?

உங்களது உணவு நேரத்தினை முக்கியமாக இரவு உணவை, சீராக்கிக் கொள்ள வேண்டும்.ஜீரண மண்டலமும் ஓர் இயற்கையான தாள கதியிலேயே வேலை செய்கிறது. அது மாலை ஆனதும் சற்று மெதுவாகவே செல்லும்.தாமதமாக உண்பது ஜீரண மண்டலத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.

தூண்டும் சக்தி உடைய உணவையோ பானங்களையோ எடுத்துக் கொள்ளாதீர்கள். லேசான எளிதாக ஜீரணிக்கும் சத்வ உணவுகளை மாலையில் எடுத்துக் கொள்ளுங்கள். பால், வெண்ணை,பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இவை ஜீரணத்திற்கு மென்மையானவை,உறக்கத்திற்கும் நல்லது.எவ்வகை உணவு உங்களுக்கு நல்லது என்று மேலும் தெரிந்து கொள்ள.

எங்கு துவங்குவது?

அனுபவம் மிக்க ஓர் ஆசிரியரிடம் தியானப் பயிற்சியினைப் பெறுவது நல்லது.ஆயினும் தானே பயின்றாலும் உறக்கமின்மைக்குத் தீர்வுகள் கிடைக்கும்.

#1 மூச்சினைப் பற்றிய விழிப்புணர்வு

ஆரம்பிப்பதற்கு நல்ல வழி, எளிய மூச்சு விழிப்புணர்வு. சற்று நேரம் எடுத்துக் கொண்டு, உங்கள் மூச்சின் போக்கினைக் கவனியுங்கள்.அமர்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ உள்ளே வரும்,வெளியே போகும் மூச்சினைக் கவனமாக உணருங்கள். மூச்சு உங்கள் உடலுக்குள் வரும்போதும் வெளியே போகும்போதும் அதைத் தொடருங்கள்.ஒரு வசதியான தாளகதியில் படிப்படியாக மூச்சினை அதிகப் படுத்துங்கள் அது உங்கள் மனதிலும் உணர்ச்சிகளிலும் ஏற்படுத்தும் விளைவுகளைக் கவனியுங்கள்.விட்டு விடக் கற்றுக் கொண்டு, உங்கள் மூச்சு மூலம் நீங்கள் ஏறப்டுத்தும் பரப்பிலேயே இருங்கள்.

மூச்சு நமது உடல் அமைப்பு முழுமையிலும் ஓர் சக்தி வாய்ந்த விளைவினை ஏற்படுத்துகின்றது. மனம் ,உணர்ச்சிகள் மற்றும் உடலின் அமைப்பினைப் பற்றிய விழிப்புணர்வு, உள் உறுப்புக்களின் சமநிலை யை அமைத்துக் கொள்வது இவையே அழுத்தத்தை சரிப் படுத்திக் கொள்வதின் அடிப்படை ஆகும். மூச்சினைப் பயன்படுத்துவது என்பது , மனதை தளர்த்தி, சேர்ந்து விட்ட இறுக்கத்தைக் குறைத்து, எண்ணப் போக்கின் வேகத்தைக் குறைத்து, ஓர் இணக்கமான சமாதான பயனை அளித்து உறக்கத்திற்கு உதவும்.

#2 வழிகாட்டுதலுடன் இணைந்த தியானம்

இது ஒரு எளிய முறை. பல்வேறு தலைப்புக்களில் கிடைக்கும்.உங்களுக்கு எது விருப்பமானாலும் வழி காட்டுதல் இணைந்த தியானம் உங்கள் மனப்பரப்பை விரிவாக்கி, உங்களது நரம்பு மண்டலத்தினை விடுவிக்கும்.தினமும் செய்யலாம். அல்லது அதிக அழுத்தம் கூடும்போதும் செய்யலாம். இப்போது தியானம் செய்ய விரும்புகிறீர்களா?

#3 யோகிக் உறக்கம்

யோகா நித்ரா என்பது விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட பாலம் இது ஓர் எளிய பயிற்சி. இதில் நீங்கள் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக என்ன நடக்கிறது என்பதை விழித்துணர்ந்தே உங்கள் கவனத்தை மென்மையாக எடுத்துச் செல்வீர்கள்.இது மூச்சின் மூலம் உங்களை நன்கு இளைப்பாற்றி உங்கள் அமைப்பு முழுவதும் ஓர் ஒய்வு நிலையில் இருக்கச் செய்யும். இந்த வளமான,அமைதியான நிலை உறங்குவதற்கு ஓர் படியாக உதவும்.

#4 மந்த்ரா தியானம்

இதுவும் உறங்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த வழியாகும். சஹஜ் சமாதி தியானம் மந்த்ரா தியானத்தைக் கற்க நல்ல வழியாகும். இதில் ஆசிரியர் ஓர் மந்திரத்தை உங்களுக்குக் கற்பிப்பார், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த மந்திரத்தைப் பயன் படுத்தி,முயற்சியின்றி தியானம் செய்வது மட்டுமே.அந்தப் பயிற்சியினைச் செய்ய விரும்புகிறீர்களா?

Register Now

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் அருளுரைகளிருந்து எடுக்கப் பட்டது.

மர்லின் மூன் எழுதிய இக்கட்டுரை, பாரதி ஹரீஷ் அவர்களின் குறிப்புக்களை உள்ளடக்கியது.