பன்றிக் காய்ச்சலைத் (ஸ்வைன் ஃப்ளூ) தவிர்க்க ஐந்து யோகப் பயிற்சிகள்

பன்றிக் காய்ச்சலைத் (ஸ்வைன் ஃப்ளூ)  தவிர்க்க ஐந்து  யோகப் பயிற்சிகள்

 

காட்டுத்  தீயைப் போன்று பரவிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல் பற்றிய பயம் மக்களிடையே  அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த கொடிய வைரஸ் உங்களை வீழ்த்துவதைத் தடுக்க தேவையான   முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்துக்கொள்வது முக்கியம் ஆகும். நோயை விட நோய்த்தடுப்பு  எப்போதும் சிறந்தது என்பதால், H1N1 வைரஸிலிருந்து  உடலைப் பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்க வேண்டும். விஷயங்கள் கை மீறிப்  போகும் போது மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எப்போதும் உதவுகின்றன. ஆனால் கீழே குறிப்பிடப் பட்டுள்ள   எளிய யோகா தோற்ற நிலைகள்  நோய் எதிர்ப்பு சக்தியை  உருவாக்கவும், மற்றும் உங்கள் மனதில் வலிமையை ஏற்படுத்தவும் உதவும்.

 

1

 

அதோ முக்த ஸ்வானாசனம்

 

 

அதோ முக்த ஸ்வானாசனம்  போன்ற ஒரு தலைகீழ் தோற்றநிலை, மூக்கெலும்புக் குழிவுகளில்  ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அங்குள்ள அடைப்புகளை அகற்றுகிறது. மேம்பட்ட ரத்த ஓட்டம்  மூளையில் செயல்விளைவுகளை ஏற்படுத்தி,  அதனால் மனதை புத்துணர்ச்சியுறச் செய்வதற்கும், அமைதியாக வைப்பதற்கும் உதவுகிறது.

 

2

 

புஜங்காசனம்

 

 

இந்த யோகத் தோற்ற நிலை நுரையீரல்களை விரிவடையச் செய்து, ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அடி வயிற்றுப் பகுதி உறுப்புக்களையும் மசாஜ் செய்து மேம்பட்ட ஜீரணத்திற்கு வழி வகுக்கிறது. ஆரோக்கியமான சுவாச மற்றும் ஜீரண அமைப்பு உடல் பாதுகாப்பிற்கு முதன்மையான வழிவகுத்து வைரஸ்களை விலக்கி வைக்கிறது.

 

 

3

 

கபாலபாதி பிராணாயாமம்

 

 

இந்த தனித்துவம் வாய்ந்த  மூச்சு நுட்பத்தில்  சக்தி மிகுந்த  வெளி மூச்சு மூக்கடைப்பை நீக்கி ,  உடலில் உள்ள ஆற்றல் வழிகளை தெளிவாக்கி,  இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும்  இது வயிற்று உறுப்புகளை தூண்டி, ஜீரணத்தை  மேம்படுத்துகிறது.

 

4

 

மத்யாஸனம்

 

 

ஆழ்ந்த  சுவாசத்தின் மூலம் மத்யாஸனம் நுரையீரல் கோளாறுகளுக்கு நிவாரண மளிக்கிறது. பாராதைராய்டு,பினியல் மற்றும் பிட்யுடரி சுரப்பிகளை சரிப்படுத்தி ஹார்மோன் சுரப்பை மேம்படுத்துகிறது. அதன் மூலமாக ரத்த அழுத்தம், ஜீவத்துவ பரிணாமம் மற்றும் உடலின் உஷ்ணநிலை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

 

5

 

பவன முக்தாசனம்

 

Description: https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/wysiwyg_imageupload/Pawanmuktasana.jpg

முதன்மையாக வாயுவிலிருந்து நிவாரணம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந் தாலும், இந்த ஆசனம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், வயிற்று உறுப்பு களை மசாஜ் செய்வதற்கும், ஜீரணத்தை மேம்படுத்தவும்  உதவுகிறது.  இடுப்பு மற்றும் கால்களில்  உள்ள பதற்றத்தைக் குறைக்கிறது.

 

சீரிய  யோக பயிற்சியாளர்கள் ஜால்னீயைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம் - இது ஒரு  நுட்பம். தண்ணீர் மூலம் மூக்குப் பகுதியிலிருந்து  தொண்டை வரை  தூய்மைப்படுத்த உதவுகிறது.

மேற்கூறிய யோக ஆசனங்களைத் தவிர  சிசுவாசனம், சர்வாங்காசனம்,  ஹஸ்தபாடாசனம் சேது பந்தனாசனம் ஆகியவையும் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைத்து காய்ச்சலை எதிர்க்கப் பயன்படுகின்றன.

சீரான  யோகப்  பயிற்சி உடலை ஆரோக்கியமாக,  நெகிழ்வாக  மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவமுறை மற்றும் சீரான தியானம் யோகப் பயிற்சியின் பயன்களை மேம்படுத்தி, உங்கள் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக ஆக்கும். ஓர் யோகியின் உடல், தியானியின் சாந்தமான மனம் இவற்றுடன் பன்றிக் காய்ச்சலை எதிர்ப்பது கடினமான  விஷயம் அல்ல.

 

யோகா மூலம் பன்றிக் காய்ச்சலைத் தடுத்து நிறுத்துங்கள்

ஸ்ரீ ஸ்ரீ யோகாவின் உலகளாவிய தலைவராகிய  கமலேஷ் பார்வால் உடன் நடத்தப்பட்ட ஒரு கேள்வி பதில்  அமர்விலிருந்து ஒரு பகுதியை இங்கு அளிக்கி றோம்.  கமலேஷ் ஒரு மூத்த ஆர்ட் ஆப் லிவிங்  ஆசிரியர்.  உலகின் பல கண்டங் களிலும் பயிற்சிகளை  நடத்தியுள்ளார்.

 

இங்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துக் குறிப்புக்களும் நோய் தடுப்புக் கானவை. நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவரை அணுகுவதே  சிறந்தது.

சீரான யோகப் பயிற்சி  காய்ச்சலைத் தடுக்குமா? ஆம் என்றால் எவ்வாறு ?

சீரான யோகா அனைத்து அமைப்புக்களையும்   (உட்சுரப்பு, செரிமானம்  மற்றும் ரத்த ஓட்டம் ) உகந்த முறையில் நன்றாக வேலை செய்ய வைக்கிறது. பெரும்பாலும் தலை கீழ், மற்றும் முன்னோக்கி வளைதல் ஆகிய யோகா தோற்ற நிலைகள்  நிணநீர் அமைப்பை சீர் செய்து, உடலிலிருந்து  நச்சுக்களை  வெளியே வடிகட்டி அனுப்பப் பயனுள்ளதாக இருக்கிறது. மூக்கெலும்புக் குழிவை தூய்மை யாக வைத்துக் கொள்ள  அதோ முக சுவானாசனம்    ஹஸ்தபாடாசனம் சர்வாங் காசனம், மத்யாஸனம்  ஆகியவற்றைப் பழகிக் கொள்ளுங்கள். ஜல்னெட்டி போன்ற பழக்கவழக்கங்கள் சுத்தமாகவும், தொற்றுக்களின்றியிருக்க  உதவும்.

 

 

யோகா மூலம்  நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு உருவாக்க முடியும்?

யோகா  உடல் செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதுடன் மனம் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு மனநிலையுடன் நேரிடையான தொடர்புள்ளது. மோசமான  கல்லீரல் செயல்பாடு, செரிமானம் மற்றும் மன அழுத்தம் கொண்ட உடல் மற்றும் மனதில் தொற்றுநோய்களைக் கவரக்கூடிய ஆபத்து அதிகமுள்ளது. பாத கோணாசனம், நடராஜசனம், சிசுவாசனம், பவனமுக்தாசனம் ஆகியவை அடிவயிற்றுப் பகுதி உறுப்புக்களை மென்மையாக மசாஜ் செய்து ஜீரணக் கோளாறுகளை அகற்ற உதவுகின்றன.

ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் தியானம் செய்தல் மூலம்   எண்டோர்பின் அதிகரிக்கிறது; மற்றும் இரத்த கார்டிசோல் அளவுகளை குறைக்கிறது; மேலும் ஒருவரின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது என்பனவற்றை  எடுத்துக் காட்ட  ஏராளமான ஆய்வுகள்   செய்யப் பட்டுள்ளன. ஆழ்ந்த உறக்கம்  நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கச் செய்கிறது.

 

ஆழ்ந்த மூச்சு அல்லது பிராணயாமா எப்படி உதவுகிறது?

பிராணயாமாவின் மூலம் அதிகரிக்கும் சுவாசம்   பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் தாக்குதல்களுக்கு எதிர்ப்பை உருவாக்குகிறது. கபால பாதி சுவாச அமைப்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பாஸ்த்ரிகா   நுரையீரல்  அசுத்தங்களை வடிகட்டுகிறது. நாடிசோதன் பிராணாயாமம் மூக்கெலும்பு குழிவு (sinus) எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

 

 

யோகா மூலம் பன்றி காய்ச்சலுக்கு  சிகிச்சை செய்ய முடியுமா?

உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு விட்டால் ஆசனங்களை செய்ய முடியாது.  பிராணயாமம் செய்யலாம். ஆரம்ப கட்டங்களில், புஜங்கசானம், சேது பந்தனாசனம், பஸ்திரிகா போன்ற பிராணாயாமம்  செய்தால் அவை  நுரையீரலை விரைவு படுத்த உதவும். மேலும், அழுத்தம் உருவாக்கும் ஹார்மோன்களை ஒதுக்கி,  நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கச் செய்வதில்  தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஷீதலி  மற்றும் ஷீட்காரி பிராணயாமம்  காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

ஆயுர்வேத மருத்துவர்கள்  துளசி இலைகளை நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு   பரிந்துரைக்கின்றனர். ஆக்ஸிஜனேற்றங்கள்  அதிகமான , இது மன அழுத்தத்தைத் தடுக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, சுவாச அழற்சி மற்றும் நெரிசல் ஆகியவற்றைக் குறைக்கின்றது. துளசி, இஞ்சி மற்றும் தேன் / வெல்லம் ஆகியவற்றை  குடிநீரில் கொதிக்க வைத்துப் பருகலாம். அல்லது துளசி கலந்த தேநீர்   வழக்கமான இடைவெளியில் பருகலாம். லக்ஷ்மி தரு இலை கள் (சிமருபு), துளசி, நெல்லிக்காய்  மற்றும் அம்ருட் (கிலோய்) ஆகியவற்றுடன் தயாரிக்கப் படும் தேநீர் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

கூடுதலாக, இஞ்சி, மஞ்சள்தூள்  ஆகியவற்றை எலுமிச்சம் பழ சாற்றுடன்  அல்லது தேன் கலந்து  ஓர் நாளுக்கிருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதத் தின் சக்தி சொட்டுகள் (Sakthi Drops) மேலே உள்ள பெரும்பாலான அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

காய்ச்சலை தடுக்க அல்லது சிகிச்சை செய்ய எந்த ஒரு குறிப்பிட்ட யோக உணவு உள்ளதா?

  • சாத்வீகமான மற்றும் புதிதாக சமைக்கப்பட்ட எளிய சைவ உணவை  சாப்பிடுங்கள்.
  • துரித உணவு, உறைந்த மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
  • தினமும் குறைந்தபட்சம் 6 முதல் 8 லிட்டர் தண்ணீர்  குடிக்க வேண்டும்.
  • உங்கள் உணவில் பச்சை காய்கறிகளை சேர்த்து, குறித்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • வைட்டமின் சி நிறைந்த காய்கறிகள் மற்றும் நெல்லிக்காய்  ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • முறையான செரிமானத்திற்காக திரிபலாவை தவறாமல்  எடுத்துக் கொள்ளுங்கள்.

 

கூடுதலாக, வீட்டிலேயே சாம்பிராணி புகையை  போடுங்கள். அது ஒரு மிகவும் சக்தி வாய்ந்த வளிமண்டலக் கொல்லி மருந்து. மற்றும் வீட்டைச் சுற்றி அக்னிஹோத்ரா சாம்பலை தூவி விடுங்கள்.

இறுதியாக, ஹேயம் துக்கம் அனாகதம் : हेयं दुःखमनागतम्

பதஞ்சலியின்  யோக சூத்திரங்கள் வரவிருக்கும் வேதனையைத் தவிர்க்க யோகா உங்களுக்கு உதவுகிறது என்று கூறுகின்றன. எனவே, சில யோகாசனங்கள் , பிராணாயாமங்கள்  மற்றும் தியானம் ஆகியவற்றைத்  தொடர்ந்து பயிற்சி செய்து காய்ச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.