தோள்களுக்கான யோகா தோற்றநிலைகள்

தோள்களுக்கான யோகா தோற்றநிலைகள்: உங்கள் தோள்கள் இறுகி விடாமல் காத்துக்கொள்ளுங்கள்.

 

தற்கால நகர்புற நாகரிக வாழ்க்கை முறையினால் உண்டாகும் அழுத்தத் தினால் உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அழுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்படுவது புஜங்கள் தான். மனிதனின் உடல், அசைவுகளுக்கு ஏதுவாகும் வகையில், நாள்முழுவதும் வேலையில் ஈடுபட,மற்றும் உணவு சேகரிக்க என சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய வகையில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது அவ்வாறு இருப்பதில்லை. மேஜையில், கணினி முன் அமர்ந்து நாள் முழுவதும் வேலை செய்யும் வகையிலேயே உள்ளது. உணவைக்கூட வேலைகளுக்கு இடையிலேயே உட்கொள்கின்றனர். வீட்டிற்கு வந்த பின்னும் தொலைக் காட்சிப் பெட்டிக்கு முன் அமர்ந்து கொள்வதன் விளைவாக நமது தோள்கள்  ஒடுங்கி, நாளடைவில் இறுகிப் போகிறது.பொதுவாக வலது தோளே அதிகமாக பாதிக்கப்படுகிறது.

தோள்களில் ஏற்படும் வலியை யோகா குறைக்கிறது.

உட்கார்ந்தபடியே வேலை செய்யும் இந்த மந்தமான தற்கால வாழ்க்கை முறையுடன் மன அழுத்தமும் எதிர்மறையான உணர்ச்சிகளும் சேர்ந்து தோள்களில் இறுக்கத்தையும் அடைப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

எனவே எந்த மாதிரியான பயிற்சிகள் இதுபோன்ற இறுகிய தோள்களை இளக்கும்?

</strong><em><strong>yoga பயனளிக்குமா?

சந்தேகமே வேண்டாம். யோகாசனங்கள் தோள்களில் உள்ள இறுக்கத்தை இளக்கி, அழுத்தத்தை நிவர்த்திக்க மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் மார்புப்பகுதி, முதுகின் மேல் பகுதி ஆகியவற்றிற்கும்  பயன் அளிக்கும்.   

மார்பின் மேற்புறத்தில் ஏற்படும் இறுக்கம் புஜங்களை ஒடுக்கி தசைகளை பலவீனப்படுத்துகிறது . முதுகுத்தண்டு அமுங்குவதைத்தவிர்த்து உடலை மொத்தமாக நல்லதொரு  நிலையில் வைக்கவும் யோகா உதவும். யோகாவை இதுபோன்ற பிரச்சனை களுக்கு தீர்வாக இல்லாமல், பிரச்சனையே வராமல் தடுக்க உபயோகிக்க வேண்டும் .முதுகின் மேல்பகுதி, கழுத்து, புஜங்களில் உள்ள தசைகளை பலப்படுத்தவும் நன்றாக விரிக்கவும் யோகாசனங்கள் உதவும். மேலும் சரியான நீண்ட நாள் பலன் கிடைக்க தேர்ச்சிபெற்ற யோகாசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டால் உங்களின் பிரத்யேகப் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஆசனங்களை எடுத்துக்கூற ஏதுவாகும்

புஜங்களுக்கான யோகாசனங்கள்

இறுகிப்போன புஜங்களுக்கு ஏற்ற ஆசனங்கள் எவை ?

காலையில் எழுந்தவுடன் ஜாகிங்,    கை கால்களை வேகமாக உதறுதல், குதித்தல் போன்ற வற்றை செய்து உடலை யோகாவுக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மிகவும் சிறந்தது சூரிய நமஸ்காரத்துடன் காலைப்பொழுதைத் துவக்குவதாகும். உடலை இவ்வாறு தயார் படுத்தியபின் தோள்களுக்கான பயிற்சி, தோள்களை சுற்றுதல் (பின்புறம்,கீழே, என சுற்றுதல் ), கழுத்தை சுற்றுதல், அதன் பின் இடுப்பை முறுக்குதல் என செய்த பின்பு, பின்புறம் வளைதல், மார்பை விரித்தல் போன்ற சற்று கடுமையான ஆசனங்களை செய்யலாம்.  பயிற்சி பெற்ற யோகாசிரியர்களின் வழிகாட்டுதலோடு இப் பயிற்சிகளை செய்வது சிறந்ததாகும் .

பெரும்பாலானோர் இறுகிய தோள்களோடு துவங்கி, விடாமல் தொடர்ந்து  பயிற்சி செய்து காலப்போக்கில் நல்ல பலனைப்பெற்றுள்ளனர். அடைப்புகள் நீங்கி இறுக்கம் குறைந்து புஜங்கள் மிருதுவாகி வளையக்கூடியதாக ஆகிறது.  எனவே எளிமையான தோளுக்கான இந்த ஆசனங்களை துவங்கவும்   

1. கருடாசனா

2. பஸ்ச்சிம் நமஸ்காராசனா

3. உஷ்ட்ராசனா

4. தனுராசனா

5. பூர்வோத்தானாசனா  

1. கருடாசனா

Description: https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/wysiwyg_imageupload/Unfreeze-Your-Shoulders-with-Yoga-01.jpg

  • இது முதுகின் மேல் பகுதியையும் தோள்களையும்   நன்றாக  விரிவடையச்செய்கிறது .
  • புஜங்களை இளக்கி அழுத்தத்தை விலக்குகிறது  

 

2. பஸ்ச்சிம் நமஸ்காராசனா

Description: https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/wysiwyg_imageupload/Unfreeze-Your-Shoulders-with-Yoga-02.jpg

  • தோள்பட்டையிலுள்ள பெக்டோரல் தசைகளை விரித்து முதுகின் மேல் பகுதியை விரிவடையச்செய்கிறது .

3. உஷ்ட்ராசனா

Description: https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/wysiwyg_imageupload/Unfreeze-Your-Shoulders-with-Yoga-03.jpg

  • உடலின் முன் பகுதியை விரித்து பலப்படுத்துகிறது
  • கீழ் முதுகுப்பகுதியின் இறுக்கத்தை இளக்குகிறது.

 

4. தனுராசனா

Description: https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/wysiwyg_imageupload/Unfreeze-Your-Shoulders-with-Yoga-04.jpg

  • மார்பு கழுத்து தோள்களை விரிவடையச்செய்கிறது
  • அழற்சியையும் அழுத்தத்தையும் நீக்க மிகச்சிறந்தது

 

5. பூர்வோத்தானாசனா

Description: Purvottanasana image

  • மார்பு கழுத்து தோள்களை விரிவடையச்செய்கிறது
  • கணுக்கால், மணிக்கட்டு பின் முதுகு தோள்கள் ஆகியவற்றை உறுதிப் படுத்துகிறது.

முக்கியமாக கவனிக்க வேண்டியவை :

  • ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு கவனத்துடன் மெதுவாக மாறவும் .
  • மூச்சின் மேல் கவனம் வைத்து சீராகவும் சிரமமின்றியும் கவனத்துடன் செய்யவும்
  • தேர்ச்சிபெற்ற ஆசிரியரிடமிருந்து பயிற்சியை நன்றாகக் கற்றுக்கொண்டு பிறகு வீட்டில், பயிற்சியின்போது கூறியது போல செய்யவும் .

 ஸ்ரீ ஸ்ரீ யோகா வகுப்பில் சேர்ந்தோ அல்லது உங்கள் இடத்திற்கு அருகாமையாலுள்ள மையங்களில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி வகுப்புகள் துவங்குவதை தெரிந்துகொண்டு அதில் பயிற்சி பெறுவதே சிறந்த பலனைத்தரும்.

இப்பகுதியை எழுதியவர் மீனா எற்சேல்

 

யோகாபயிற்சி உடலையும் மனத்தையும் வளரச்செய்து உடல் ஆரோக்கியத் திற்கு அதிக பலனை தர வல்லது. எனினும், இது மருந்துக்கு மாற்று அல்ல தேர்ச்சிபெற்ற ஸ்ரீ ஸ்ரீ யோகாசிரியரி டமிருந்து, யோகாசனங்களை கற்றுக்கொண்டு பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். ஒரு வேளை,உங்கள் உடலில் மருத்துவ ரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்வது நல்லது. அருகாமையில் உள்ள வாழும் கலை மையங்களில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி நடப்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அதைப்பற்றிய தகவல் அல்லது கருத்துக்கள் வேண்டுமாயின் info@srisriyoga.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  எழுதவும்.