யோகாசனத்தினால் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம்

 

 

 

 

 

என்ன சத்தம் அது? நாய் குரைக்கிறதா? குப்பை லாரி கிளம்புகிறதா?அல்லது ஏதேனும் விமானம் பறக்க  ஆயத்தமாகிறதா? இல்லையில்லை. அது குறட்டையின் சத்தம். சந்தோஷமாய் நீங்கள் சிரித்தால் உலகமே உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். குறட்டை விட்டு தூங்குகிறீர்களா? நீங்கள் தனியாகத்தான் தூங்கவேண்டும். குறட்டை விட்டு தூங்குவதை நாம் எளிதாக எடுத்து கொள்கிறோம் . அதைப்பற்றிய நகைச்சுவைகள் வேறு.  ஆனால் துரதிருஷ்ட வசமாகஅது உலகளாவிய பிரச்சினை. குறட்டை  விடுபவருக்கும் சரி ,அருகில் படுத்து உறங்குபவருக்கும்சரி,பிரச்சனை ; அருகில் படுத்து இருப்பவருக்கு சரியான தூக்கம் இல்லாமல் கஷ்டம். குறட்டை விடுபவரோ இதய நோய்க்கும் ஆளாகலாம்.

 

விஞ்ஞான ரீதியாக குறட்டை விடுவது எதனால் என்று பார்க்கலாம்.

 

தூங்கும் போது தொண்டைக்கு பின்னால் இருக்கும் தசைகள் தளர்வடைகின்றன. அதனால் சுவாசக்   குழாயின் பாதை குறுகி விடுகிறது. சில சமயம் மூடிக்கொண்டுவிடும். மூச்சு விடும்போது அந்த குறுகியவழியாக சுவாசக்காற்றானது வேகமாக உட்சென்று வெளியேறுவதால் அதை சுற்றியுள்ள திசுக்கள் அதிர்வடைகின்றன. அந்தஅதிர்வுகளினால் குறட்டை சப்தமாக வெளிப்படுகிறது. சுவாச குழாய் மேன்மேலும்  குறுகினால் அதை சுற்றியுள்ள திசுக்களும் அதிகமாக அதிர்வடையும். அதனால் குறட்டை சப்தமும் அதிகமாகும். மூச்சு செல்லும் பாதை  குறுகுவதற்கு,  மூக்கிலோ வாயிலோ தொண்டையிலோ பிரச்சனை இருக்கலாம்.

 

 குறட்டை விடுவதன் காரணங்கள்என்ன ?

நாம் சுவாசிக்கும் பாதையில் காற்று தடை பட்டால் குறட்டை ஏற்படுகிறது. அதற்கு  பல காரணங்கள்  உண்டு. மன அழுத்தம், ரத்தஓட்டத்தில் சிக்கல்கள், உடற்பருமன் , சைனஸ் மற்றும் மூக்கினால் வரும் தொந்திரவுகளாலும், பரம்பரையினாலும் வரலாம். புகை பிடித்தல், மது அருந்துதல், சரிவிகித உணவு எடுத்து கொள்ளாமல் இருத்தல் , சிலவகை மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை,மேலும் நாக்கு தடித்து  இருப்பதும், டான்சில்ஸ் பிரச்சினையும், வயோதிகமும் கூட குறட்டைக்கு காரணம் ஆகலாம்.

 

 உங்கள் வாழ்க்கை தரத்தை குறட்டை எவ்வாறு பாதிக்கிறது ?

நல்ல தூக்கம் இல்லாததால் தூக்க மூச்சுத்திணறல் அல்லது தற்காலிகமாக மூச்சு விடுதல் நின்று போகின்றது. மூச்சு இளைப்பு மற்றும் மூச்சடைப்பு ஏற்படுகின்றது. தொண்டை புண்ணாகி போகின்றது.ரத்தக் கொதிப்பு நோய் மற்றும் ஸ்ட்ரோக்கே ஏற்படவும் காரணமாகிறது. கோபம், எரிச்சல், கவனக்குறைவு, பாலுறவில் நாட்டம் இல்லாமை கூட இதன் பக்க விளைவுகள். பகற்பொழுதில் குழப்பமானவராகவும், எதிலும் கவனம்  இல்லாமலும் இருக்க வாய்ப்புகள் உண்டு. வாகனம் ஓட்டுபவர்களுக்கும், இயந்திரங்களில் வேலை செய்பவர்களுக்கும்  நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். அவர்கள் உயிருக்கு உத்திரவாதமே நல்ல  தூக்கம் தான் . இதையெல்லாம் பார்க்கும்போது , குறட்டையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று  தோன்றுகிறது அல்லவா? இயற்கையான முறையில் யோகப்பயிற்சிகளின் மூலம் குறட்டையை நிறுத்தி  விடலாம். இன்றைக்கு குறட்டையை நிறுத்த எத்தனையோ தடுப்பு சிகிச்சைகள், வழி முறைகள் மற்றும் ரணசிகிச்சை கூட உண்டு. இதற்கு பதிலாக யோகா செய்வதைப்பற்றியும் சிந்தியுங்கள். ஏனெனில் 

1. அது பாதுகாப்பானது,  பக்க விளைவுகள் இல்லாதது.

2. குறட்டையை குறைத்து சுவாச பாதையைசீராக்குகிறது.

3. வேறேதும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தாலும் கூட இதையும் செய்யலாம்.

 

  குறட்டையை  நிறுத்துவதற்கான ஆசனங்கள்

குரைப்பதை.....ம்.....குறட்டையை நிறுத்த, சில ஆசனங்கள், பிராணாயாமா செய்து கட்டுப்படுத்தலாம்.

 

புஜங்காசனா  (பாம்பு  படம் எடுப்பது போன்ற தோற்ற நிலை  )

                                   

 

           

 

மார்பை விரிவடைய செய்கிறது. இதயத்தையும், நுரையீரல்களையும் சுத்தகரிக்கிறது. ரத்த ஓட்டத்தில்  பிராணவாயுவின்  அளவை அதிகரிக்கிறது.

 

தனுராசனா (வில்லைப்போன்ற தோற்ற நிலை  )

 

சுவாசத்தை சீராக்குகிறது. மார்பிலுள்ள தசைகளை விரிவடையச்செய்வதால் உள்மூச்சும், வெளிமூச்சும் ஆழமாக உட்சென்று  வெளிவருகிறது.

                                                           

ப்ரம்மரி பிராணயாமா (பறக்கும் வண்டைப்போன்று சப்தம் எழுப்புதல் )

 

 

கவனச்சிதைவு ஏற்படாமல் மனம் ஒருமுகப்பட உதவுகிறது.பதட்டமும் கோபமும் வராமல் தடுக்கிறது.

ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.

நாடிசோதன் பிராணாயாமா ( மூக்கின் துவாரங்கள் வழியாக மாற்றி மாற்றி சுவாசித்தல் )

 

ரத்தக்குழாய்களை சுத்திகரிக்கிறது. தொண்டையில் தொற்றுகிருமிகளை போக்குகிறது. குறட்டையை கட்டுபடுத்துகின்றது.

கபால பாத்தி பிராணயாமா (கபாலத்தை தூய்மை படுத்தும் மூச்சு பயிற்சி)

 

மண்டையோட்டில் இருக்கும் சைனஸ் சுத்தமாகிறது. ஆழ்ந்த தூக்கம் ஏற்படுகின்றது.

உஜ்ஜய் பிராணாயாமா

  1. சௌகர்யமாக அமர்ந்து, கண்களை மூடி உதடுகளை ஓட்ட வைத்து கொள்ளுங்கள்.
  2. மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.
  3. தொண்டைக்கு பின்புறமாய் இருக்கும் தசைகளை, மூச்சு எடுக்கும் போதும் வெளி விடும்போதும் இறுக்குங்கள்.
  4. வாயை மூடிக்கொணடு ஒரு ஸ்ட்டிராவில் இழுப்பதுபோல மூச்சைஇழுத்து நிதானமாக ஆழமாக மூச்சை வெளியே விடுங்கள். உங்கள் மூச்சு காற்றானது அலைக்கடலின்  அலைகள் எழுப்பும் சத்தத்தை ஒத்து இருக்கும். இதைப்போல ஒன்பது முறையாவது செய்யவும்.
  5. இதை செய்வதால் முகத்திலும் தொண்டையிலும் இருக்கும் தசைகள் இறுகி வலுவடைகிறது. சரியான  வேளையில் போதிய அளவு நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது.

சிம்மகர்ஜாசனா (சிங்கத்தைப்போல் கர்ஜிப்பது )

ஒரே கர்ஜனை உங்கள் குறட்டையை காணாமல் செய்துவிடும் !

தரையில் குதிகாலின் மீது அமர்ந்து கொள்ளுங்கள் (வஜ்ராசனத்தில்)தொடைகளை சற்று தள்ளி வைத்து கொள்ளுங்கள். உங்கள் விரல்கள் உங்களை நோக்கியும் , மணிக்கட்டு வெளியே நோக்கியும் இருக்குமாறு

தரையில் வைத்து கொள்ளுங்கள். சற்றே முன்புறம் சாய்ந்து வாயைத்திறந்து, நாக்கை வெளியே நீட்டுங்கள். கர்ஜனையுடன் மூச்சை வெளியே விடுங்கள். இதை 2 ,3 முறை செய்யுங்கள். இதனால் நாக்கு  பயிற்சி அடைகிறது. கழுத்து தசைகள் தளர்வடைகிறது. தொண்டைப்புண் சரியாகிறது.தொண்டைக்கு முன்  இருக்கும் தசைகள் தூண்டப்படுகிறது.

ஓம் மந்திரம் கூறுதல்.

தூக்கத்தை வரவழைக்கிறது. கவனச்செறிவு ஏற்படுகின்றது.ஓம் எனும் மந்திரம் சொல்வதால் நம் உடலில் உள்ள ஓவ்வொரு செல்லும் அதிர்வடைகிறது. குறட்டை நம்மை பல வகையிலும் பாதிக்கின்றது. அது உங்களையோ     உங்கள் கூட இருப்ப வரையோ பாதிக்காமல் இருக்க அதை தடுக்கும் வழிவகைகளை  உடனடியாக பாருங்கள்.

யோகா மற்றும் தியானத்துடன் நல்ல உணவு பழக்கங்களையும்,சரியான வேளையில் நிம்மதியான தூக்கத்தையும் பழக்கப் படுத்திக்கொள்ளுங்கள். முடிந்தால், ஆயுர்வேத முறைப்படி உணவு உண்ணுங்கள் .

உடல் எடையை குறைத்து புகை பிடிப்பதையும் மது பழக்கத்தையும் விட்டு விடுங்கள். இதனால் குறட்டை  நிற்பதுடன் கூட நீங்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.உங்கள் வாழ்க்கை துணை உங்களை விட்டு விலகும் முன்னர்,  குறட்டையை விலக்குங்கள்.

யோகப்பயிற்சிகள் உங்கள் மனதையும் உடலையும் பல வகைகளில் பாதுகாக்கின்றது. ஆயினும் அவை மருந்துகளுக்கு மாற்று அல்ல. நல்ல தேர்ந்த ஆசிரியரின்  வழிகாட்டுதலின்படி யோகாசனா கற்றுக்கொள்ளுங்கள். மருத்துவ ரீதியாக உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு  இருந்தால், நல்ல மருத்துவரையும், ஸ்ரீஸ்ரீ யோகா ஆசிரியரையும் கலந்து ஆலோசித்து அதன்பிறகு  பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதை பற்றி மேலும் அறியவும், பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணைப்பற்றி தெரிந்து கொள்ளவும், மேலும் உங்கள் கருத்துக்களை கூறவும் info@srisriyoga.in  என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.