உள்ளுணர்வு செயல்முறைப் பயிற்சி ( Intuition Process) (Intuition Process for kids and teenagers in tamil)

வாழும் கலையின் உள்ளுணர்வு செயல் முறை, 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கான இரண்டு நாட்கள் நடைபெறும் பயிற்சியாகும். நாம் அனைவருமே ஐம்புலன்களை அப்பாற்பட்டவற்றை அறியும் இயற்கையான உள்ளுணர்வுத் திறனுடனேயே பிறக்கின்றோம். குறைவான அலைப்புறுதலும், புதியதும், மற்றும் இயற்கை யோடிணைந்த மனமும் கொண்ட குழந்தைகளிடம் இது வெளிப் படை யாகவே தெரியும்.

வாழும் கலையின் உள்ளுணர்வு செயல்முறை அவர்களுக்கு, கண்களை மூடி கொண்டு நிறங்கள், உரை வாசித்தல், மற்றும் படங்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றின் மூலம் மனதில், உள்ளுணர்வு திறன்களை தட்டியெழுப்ப உதவுகிறது. ஆழமான மற்றும் புதிரான மனத்திறன்கள் உள்ளுறை வடிவத்தில் ஒவ்வொரு குழந்தை யிடமும் உள்ளன. இந்த திறன்களை மலர்ச்சியடையச் செய்யவும், நிறுவவும் , சரியான வளர்ப்பு மற்றும் போஷாக்கு தேவை. அதை உள்ளுணர்வு செயல்முறை பயிற்சி செய்கின்றது.

தகுதிகள் :

  • முதல் நிலை: 6 முதல் 8 வயது வரை
  • இரண்டாம் நிலை: 8 முதல் 18 வயது வரை

உள்ளுணர்வு செயல் முறைப் பயிற்சியின் பயன்கள்

  • உள்ளுணர்வு அதிகரிக்கிறது
  • உணர்ச்சி திறன்களை மேம்படுத்துகிறது
  • விழிப்புணர்வு மற்றும் தீர்க்கதரிசனம் அதிகரிக்கிறது
  • நம்பிக்கை அதிகரிக்கிறது
  • தெரியாதவற்றைப் பற்றிய பயத்தினை நீக்குகிறது
  • படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் அதிகரிக்கிறது

முதல் நிலை

  • வயது - 6 முதல் 8 வயது வரை
  • பயிற்சிக் காலம் : 2 நாட்கள்
  • ஒவ்வொரு நாளும் பயிற்சிக் காலம் : 1.5 மணி நேரம்

இரண்டாம் நிலை

  • வயது - 8 முதல் 18 வயது வரை
  • பயிற்சிக் காலம் : 2 நாட்கள்
  • ஒவ்வொரு நாளும் பயிற்சிக் காலம் : 2.5 மணி நேரம்
 

பயிற்சிப் பொருளடக்கம்

  • மூளை தூண்டுதல் நுட்பங்கள்
  • தியானம் மற்றும் இளைப்பாறல் நுட்பங்கள்
  • வீட்டில் நடைமுறை பயிற்சிக்கு சீ டி

பங்குபெற்றோரின் அனுபவங்கள்

தாரிணி , 17 வயது

வார்த்தைகளால் விவரிக்க முடியாது ! முதல் நாள் சற்றுப் புரியாமலும் குழப்பமாகவும் இருந்தது.என் மனம் இங்குமங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. என் உள்ளுணர்வைக் கவனிக்க முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. முயற்சி எடுத்த போதிலும், நிறங்கள் விலங்கு போன்றவற்றை ஊகிக்கும்போது ஏற்கனவே தெரிந்தது போன்று என் மனதிலிருந்து சட்சட்டென்று எழுந்தவிதம் மாயமந்திரம் போன்றிருந்தது. இரண்டாம் நாள் ஊகிப்பது முயற்சியின்றி எளிதாகவே இருந்தது. என் மனம் அதிக அளவில் இளைப்பாறியிருந்தது. எவ்வாறு ஊகித்தேன் என்பதற்கு என்னிடம் பதில் கிடையாது.! சிலசமயங்களில் மனதால் விடையைக் கேட்க முடிந்தது, அல்லது படம் மனதில் வந்தது, அல்லது அதை நான் உணர்ந்தேன். என் உள்ளுணர்வு வலுப்பெறுவதைக் குறித்து மிக மகிழ்ச்சியடைகின்றேன்.

சர்வேஷ் அஹுஜா, 11 வயது

இது உண்மையிலேயே ஓர் மாயமந்திரப் பயிற்சிதான். ஆற்றல் தரும் பல விளையாட்டுக்களை வேடிக்கையாக விளையாடி மகிழ்ந்தோம். தியானத்தின் போது சுவர்க்கத்திலிருந்தது போன்றிருந்தது. நிறங்கள், விலங்குகள் மற்றும் எங்களை என்னால் ஊகிக்க முடியும் என்பதை நம்பவே முடியவில்லை. 40 தினங்களுக்குப் பிறகு எவ்வாறு ஊகிக்க முடிகிறது என்பதைப் பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன். மிக அருமையான ஓர் பயிற்சி.

வி. ப்ரங்க்யா, 12 வயது

முழுமையாக இளைப்பாறினேன். காட்டப்பட்ட கார்டுகளை ஊகித்துக் கூறவேண்டுமென்ற போது, எவ்வாறு கண்களை மூடிக்கொண்டு ஊகிப்பது சாத்தியமாகும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என்னால் முடிந்தது. எவ்வாறு ஊகித்தேன் என்பது அதிசயமாகவே இருந்தது.இரண்டாம் நாள் மேலும் இளைப்பாறி உணர்ந்தேன். பயிற்சியைச் செய்யும்போது என்னுள் ஆற்றல் நுழைவதை அறிந்தேன். என் உள்ளுணர்வு அதிகரித்தது. எளிதாக என்னால் ஊகிக்க முடிந்தது. உருவங்கள் என் முன்னாலேயே தோன்றியதை அறிந்தேன்.காலப்போக்கில் இதை விட இன்னும் மேன்மையாக முடியும் என்பதை அறிந்தேன்.

ஸமந்வித், 15 வயது

மிக அழகான பயிற்சி. ஆனால் எவ்வாறு இது நடைபெறுகிறது என்று இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதிசயத்தில் மூழ்கியுள்ளேன். விவரிக்க வார்த்தைகளிலில்லை. மாய மந்திரம் போன்றிருக்கிறது. இதை நான் மிகவும் விரும்புகிறேன்.