தலைமை (APEX) (Art Of Living Apex Programs in tamil)

வாழும்கலையின் தலைமை பயிற்சியான இப்பயிற்சி வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள பெரு வணிகத்தின் சவால்களை எதிர்கொள்ளும் பெரு நிறுவனங்கள் மற்றும் வணிக நடுவகங்கள் ஆகியோருக்கு அளிக்கப் படுகிறது.

தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு ஒவ்வொரு முற்போக்கான நிறுவனமும் தனது பணியாளர்களிடமுள்ள ஆற்றலை விடுவிக்க முயன்று வருகின்றது.

ஊக்குவிக்கப் பட்ட பணியாளர்களின்றி நிறுவனங்கள் அதிகார முறிவு, பணி சம்பந்தமான அழுத்தம், சீக்கிரமே களைப்படைதல் அதிக சகிப்பின்மை, அதிகத் தேய் மானம், மற்றும் அதனால் ஏற்படும் மாற்றுச் செலவு ஆகியவற்றைச் சந்தித்து வருகின்றன. 
ஊக்குவிப்புக் கருவிகளான பதவி உயர்வு, ஊதிய உயர்வு , பேச்சு வார்த்தைகள் மற்றும் மேலாண்மை மாநாடுகள் ஆகியவை ஓரளவுக்கே உதவுகின்றன.

இதைப் புரிந்து கொண்ட முதன்மை நிறுவனங்கள் நீடித்த பயன்தரும் மாற்று ஏற்பாடுகளை தேடுகின்றன.

தலைமையின் சக்தி

தலைமையின் ஆற்றல் அதன் அடித்தளத்திலேயே அமைந்துதுள்ள - ஒவ்வொரு தனி மனிதனுக் குள்ளும் ஓர் தலைவன் வெளிப்படுவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றான் என்பதை நாம் நம்புகிறோம்.

இப்பயிற்சி ஊக்குவிக்கும் பயிற்சியல்ல. இது எளிய தத்துவமான - மக்களை உள்ளிருந்து ஊக்குவித்தால் அவர்கள் தாம் செய்வதை மிகவும் விரும்புவார்கள் என்னும் அடிப்படையில் தனி மனிதர்களைத் தலைவர்களாக மாற்றுகின்றது. தாம் செய்வதை விரும்பும் போது, அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வர், நிறுவனத்தின் தொலை நோக்கினை அடைய வழி வகுப்பர்.

இப்பயிற்சி கால வரம்பற்ற ஞானம், புதுமையான செயல்முறைகள் மற்றும் மேம்பட்ட மேலாண்மை உத்திகள், மூலம் தலைமை, புதுமை மற்றும் குழுப் பற்று ஆகியவற்றை வளர்க்கும் பணியிடத்தினை உருவாக்குகிறது. இப்பயிற்சித் திட்டம் அனைத்துப் படிநிலைகளிலும் கவனமான சுறுசுறுப்பை ஒருங்கிணைக்கின்றது.

250 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

நீங்கள் பயனடைந்தீர்களா?

தலைமை தாக்கம்

தலைமை திட்டத்தின், திறனை குறித்து தனிப்பட்ட ஆய்வுகள் பல நிறுனவங்களால் செய்யப்பட்டு விட்டன. தனிப்பட்ட முறையிலும், நிறுனவனங்களுக்கும் அதிக பயனளித்துள்ள தலைமைத்துவப் பயிற்சி என்று 35 க்கும் மேற்பட்ட பட்டறைகளிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் பகுப்பாய்வு கூறுகின்றது.

https://cdn.artofliving.org/sites/www.artofliving.org/files/wysiwyg_imageupload/APEX.png