தியானத்தின் பயன்கள் (Benefits of meditation in tamil)

Benefits of meditation

சாந்தம், மன அமைதி, மகிழ்ச்சி, நல்ல உடல்நிலை, அதிக ஆற்றல்,நேர்மறையான உறவுகள் வாழ்வில் நிறைவு இவற்றினைத் தேடுகின்றீர்களா? அழுத்தமும் கவலையுமின்றி வாழ விரும்புகிறீர்களா?

தியானத்தின் மூலம் இந்த அத்தனையையும் இவற்றையும் விட அதிகமான பயன்களையும், அடையலாம்.. தியானம் கணக்கிடலங்கா பயன்களை உங்களது உடல், மனம் மற்றும் ஆத்மாவிற்குத் தருகின்றது.ஆழ்ந்த தூக்கத்தில் கிடைக்கும் ஓய்வினை விட தியானத்தில் கிடைக்கும் ஒய்வு அதிகம்.அதிக ஓய்வின் பயனாக அதிக அளவில் செயல்பட முடியும்.

தியானத்தின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்

தியானத்தில் இரண்டு முக்கியமான பயன்கள் உள்ளன

  • அழுத்தம் நமது அமைப்பில் சேர்ந்து விடாமல் காக்கின்றது.
  • அமைப்பில் சேர்ந்திருக்கும் அழுத்தத்தினை விடுவிக்கின்றது.

இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழ்வதால் ஒருவர் புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் வெளிவர முடிகிறது.

தியானத்தினால் ஏற்படும் உடல் பயன்கள்

தியானத்தின் மூலம் உடற்கூறு ஒரு மாற்றத்தினைக் காண்கின்றது. ஒவ்வொருசெல்லிலும் அதிக ப்ராணா நிரப்பப் பெற்று விடுகிறது. அதனால், இன்பம், அமைதி,உற்சாகம், ஆகியவை கூடுகின்றன.

 

உடல் ரீதியாக தியானம்:

  • அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது
  • ரத்த லாக்டேட் அளவினைக் குறைத்து, பதட்டத்தினைக் குறைக்கிறது தலைவலி, புண்கள், தூக்கமின்மை,தசை மற்றும் மூட்டு பிரச்சினைகள் போன்ற இறுக்கம் காரணமான வலிகளை நீக்குகின்றது.
  • செரோடொனின் உற்பத்தியைக் கூட்டி அதன் மூலம் மனநிலையிலும் நடத்தையிலும் மேம்பாடுகளை உருவாக்குகின்றது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
  • ஆற்றல் அளவினை அதிகரிக்கின்றது.

தியானத்தினால் ஏற்படும் மன நலப் பயன்கள்

தியானம் ஒரு ஆல்பா நிலையினை மூளையில் ஏற்படுத்தி அதன் மூலம் ஆற்றுப் படுத்துகின்றது.மனம் புத்துணர்வுடனும் மென்மையாகவும் அழகானதாகவும் ஆகின்றது.சீரான தியானப் பயிற்சியின் மூலம்,

  • பதட்டம் குறைகிறது
  • உணர்ச்சி திடம் கூடுகின்றது
  • படைப்பாற்றல் அதிகரிக்கின்றது
  • ஆனந்தம் கூடுகின்றது
  • உள்ளுணர்வு வளர்கின்றது
  • மனத் தெளிவு மற்றும்மன அமைதிகிடைக்கின்றது
  • பிரச்சினைகள் சிறிதாகத் தெரிகின்றன
  • மனம் கூர்மைப் பட்டு, கவனம் கூடி, இளைப்பாறல் மூலம் விரிவடைகின்றது.
  • விரிவடையாத கூர்மையான மனம் இறுக்கம்,கோபம் மற்றும் விரக்தியை உண்டாக்கும்.
  • கூர்மையற்ற விரிவடைந்த மனம் செயலின்மையை,முன்னேற்றமின்மையை ஏற்படுத்தும்.
  • இவ்விரண்டும் சரி சம விகிதத்தில் இருந்தாலே நிறைவானது ஏற்படும்.
  • உங்கள் உள்மனமே உங்கள் மகிழ்ச்சியினை நிர்ணயிக்கும் என்னும் அறிதலை தியானம் அளிக்கின்றது.

தியானத்தின் பிற பயன்கள்

உணர்ச்சித் திடம் மற்றும் ஒத்திசைவு: இது உங்களைத் தூய்மைப் படுத்தி,உள்ளிருந்து செழித்து வளர வழி வகுக்கின்றது. நீங்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு திடமற்ற நிலைஏற்பட்டால் தியானம் உங்களை சாந்தப் படுத்துகின்றது. தியானம் படைப்பில் ஒத்திசைவை ஏற்படுத்துகின்றது: நீங்கள் தியானம் செய்யும்போது, விரிவடைந்த பரப்பில், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றீர்கள். அதையே நீங்கள் சூழலுக்கும் வெளிப்படுத்துகின்றீர்கள் அதனால் படைப்பில் ஒத்திசைவு ஏற்படுகின்றது.

விழிப்புணர்வு பரிணாமம்: தினமும் செய்யும் தியானத்தினால் உங்கள் விழிப்புணர்வு பரிணாம வளர்ச்சியடைந்து, காலப் போக்கில் உயர்ந்த சீரிய அனுபவங்களைப் பெற முடிகிறது. உங்கள் விழிப்புணர்வு பரிணாம வளர்ச்சியடையும்போது விரிவடையும்போது, வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் புறக்கணிக்கத் தக்கவையாகி விடுகின்றன.கோபம், ஏமாற்றம், ஆகியவை க்ஷண நேரம் இருந்து மறைந்து விடும் கடந்து செல்லும் உணர்ச்சிகளாகி விடுகின்றன. இந்த க்ஷணத்தில் வாழத் துவங்கி விடுகின்றீர்கள்.

தனிப்பட்ட மாற்றங்கள்: ஓர் உண்மையான தனித்துவ மாற்றத்தைத் தியானம் ஏற்படுத்தும். உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளும்போது, மேலும் அதிகமாக வாழ்வின் மர்மங்களையும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அப்போது, வாழ்க்கையின் பொருள் என்ன? வாழ்வின்  நோக்கம் என்ன? இந்த உலகம் என்ன? அன்பு என்பது என்ன ? ஞானம் என்பது என்ன? போன்ற கேள்விகள் எழத் துவங்கும். இத்தகைய கேள்விகள் எழும்போது, நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொள்ளுங்கள். இந்தக் கேள்விகள் புரிந்து கொள்ளப் பட வேண்டும். இவற்றுக்கு விடைகள் புத்தகங்களில் கிடைக்காது. வாழ்ந்து பார்க்கும்போதுதான் வாழ்வின் மாற்றங்களை அதிக அளவில் காண்பீர்கள்.

அண்ட விழிப்புணர்வு உங்களில் மலரும்

தினசரி வாழ்வில் தியானம் ஜீரணம் கொண்டு, அண்ட விழிப்புணர்வு என்று அழைக்கப் படும் விழிப்புணர்வின் ஐந்தாவது நிலை பிறக்கின்றது இந்த நிலை - தன்னையே பிரபஞ்சத்தின் பகுதியாக உணர வைப்பதாகும்..

உங்களை உலகின் ஒரு பகுதியாக உணரும் போது, , உலகம் மற்றும் உங்களிடையே அன்பு வலுவாக பாய்கிறது. இந்த அன்பு வாழ்க்கையில் உங்களை எதிர்க்கும் சக்திகளை மற்றும் தொல்லைகளைத் தாங்க வலுவூட்டுகிறது.. கோபம் மற்றும் ஏமாற்றம் இவை, தோன்றினாலும் உடனேயே மறைந்து விடும்.

அறிவு, தெளிவு புரிதல் ஆகியவை சங்கமிக்கும் வாழ்க்கை முழுமை யாகின்றது.. நீங்கள் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் வளரும்போது, நீங்கள் இன்னும் அழகாக ஆனால் வலுவாக - வாழ்க்கையில் பல்வேறு மதிப்புக் களைக் கையாளும் திறனுடைய, மென்மையான மற்றும் அழகாக மலர்வீர்கள்.

எவ்வாறு பலன்களை அடைவது

தியானத்தின் பலன்களை அனுபவிக்க, வழக்கமான சீரான பயிற்சி அவசியம். அது ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கிறது. ஒருமுறை தினசரி உள்ளெடுக்கப்படுவதன் மூலம் , தியானம் உங்கள் நாளின் ஒரு சிறந்த பகுதியாக மாறும்!

தியானம் ஒரு விதையைப் போன்றது. நீங்கள் அன்புடன் ஒரு விதையை விதைக்கும் போது, அதிகமாக பூக்கள் தோன்றுகிறது. அதே போல், விழிப்புணர்வு மரக்கன்று உங்களுக்குள் இருக்கிறது. அது எளிய தியான முறைககளின் மூலம் செழித்து வளர வேண்டும். சில பனை மரங்கள் மூன்று ஆண்டுகளில் வேறு சில பத்து ஆண்டுகளில்,பயன் தரும். பராமரிக்கப் படாதவை ஒருபோதும் பயன் தராது. அவைகள் வெறுமனே இருக்கின்றன.

அனைத்து பின்னணியில் இருந்தும் மக்கள் நன்றியுடன் ஒவ்வொரு நாளும் பணியில் இடை நிறுத்தி, சில நிமிடங்கள் தியானம் செய்து ஒரு புத்துணர்ச்சி அனுபவிக்கின்றார்கள்.. உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த. ஆழ்ந்து மூழ்க உங்களையும் அழைக்கிறோம்.

Click on the வழிகாட்டுதல் இணைந்த தியானம்செய்ய இங்கு க்ளிக் செய்து, புத்துணர்வை அனுபவியுங்கள்