ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத பஞ்சகர்மா

ஸ்ரீ  ஸ்ரீ  ஆயுர்வேத  பஞ்சகர்மா

 

நகர வாழ்க்கையின் ஆரவாரத்திலிருந்து வேறுபட்டு இயற்கையான சூழலில்  ஆரோக்கியத்திற்கான மையம்.  உங்களுக்கு புத்துணர்வு ஊட்டி ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற ஏதுவான இடமாகும்.

வாழும் கலையின் முயற்சியாக இந்த ஸ்ரீ ஸ்ரீ ஆயுர் வேத பஞ்சகர்மா தொன்மையான ஞானத்தின்  பலன்களுடனும் அனுபவத்துடனும் மக்களின் மன அழுத்தத்தைப்போக்கி வாழ்வின் ஆனந்தத்தை காணச்செய்கிறது.

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் பிரத்தயேகமாக தூங்கப்பட்ட இந்த மையத்தில் இந்தியாவின் சிகிச்சை முறையுடன் உலகின் பல பாகங்களில் உள்ள தூய்மைத்தரும் சிகிச்சை முறையும் அளிக்கப்படுகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ஆயுர் வேத பஞ்சகர்மா மையத்தில் தரப்படும் ஆரோக்கியமுறைகளாவன:  மருத்துவ மசாஜ், பிரத்யேக உணவு முறை, உடற்பயிற்சி  கடுமையான நச்சு பொருளை நீக்கும் முறைகளும் அத்துடன் வாழ்க்கை முறையில் மாற்றங்களும் கூடியது.

இப்படி யாகிய உணவு முறை, உடற்பயிற்சி யோகா தியானம்  ஆகியவற்றுடன்  கலந்த இம்முறையில் வருவோரின்  உள்ளார்ந்த தேவைககளான நோய்க்கான  தீர்வு, உடல் தூய்மை, தளர்வு, புத்துணர்ச்சி ஆகியவற்றை பெறுகின்றனர் .

ஸ்ரீ ஸ்ரீ ஆயுர் வேத பஞ்சகர்மா  சிகிச்சையில் வருவோரின் ஆரோக்கிய பயணம்,  நாடி பரிட்சையில் துவங்கி ஆயுர்வேத முறையின் தேர்ச்சி பெற்ற மருத்துவரின்  மருத்துவக் கருவிகள் பயன்பாடற்ற  கண்டறிதல் (non invasive diagnosis) என பலவாறானவை. இம்முறைகளால் உடல், மனம் உணர்ச்சிகள் ஆகியவற்றின் சமன்பாடற்றத்தன்மை மற்றும் வியாதி துல்லியமாக கண்டறியப்படுகிறது. முழுமையான  இந்த சிகிச்சை முறை அறிகுறிகளை மட்டும் நிவர்த்தி செய்யாமல் அடிப்படை காரணத்தை கண்டறிகின்றது. இது விளக்கமான, துல்லியமான, தனியொருவருக்கு உதவும் கணிப்பைத் தருகிறது.  

ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத பஞ்சகர்மாவில் தரப்படும் சிகிச்சைமுறை உயர்ந்த தரமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. பன்னோக்குடன் கூடிய முழுமையான இம்முறை நல்ல சமன்பாட்டைத்தருவதுடன் உலகின் மற்றமுறைகளான  ஆஸ்டியோபதி, ராக்கென்ஹோ, ஹிலோட், EECP, முழுமையான இருதய கண்காணிப்பு,  க்ரானியோ சேக்ரல்  சிகிச்சை ஆகியவற்றின்  நன்மைகளையும்  சேர்த்துத் தருகிறது.

இங்கு தரப்படும், காலத்திற்கும்  நிலைத்து  நிற்கும்  அழகு கலையும் ஆரோக்கிய சிகிச்சையும்,ஸ்பா என்னும் ஆரோக்கிய நீரூற்று, உடலுக்குத்தரப்படும் ஒத்தடம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவையெல்லாம் இயற்கையான மூலிகைகள், கரிம முறையில் வளர்க்கப்பட்ட தாவரப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இந்த பழமையான சிகிச்சையால் பல நற்பயன்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சிகிச்சைகளைத் தவிர இங்கு மேலும் சில வசதிகள் உள்ளன.

 அவை:

  • மீரா வனம் என்ற சகல வசதிகள் கொண்ட ப்ரீமியம் தங்கும் தொகுப்புகள், நிர்வாகிகளுக்கு உகந்த தங்கும் தொகுப்புகள்  கொண்டது.
  • பஞ்சாம்ருத  என்பது சாத்விக உணவு விடுதி. இங்கு ஆரோக்கியமான நல்ல மணமுள்ள  நாவிற்கு சுவை ஊட்டும் உணவு பரிமாறப்படும்.
  • மகாராஜா குடில் : முழுமையான ஆரோக்கியத்திற்கான இடம் இது. 5000   சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்ட   பரந்த தனி வீடுகள்;  ராஜ வாழ்க்கைக்கு நிகரான அனுபவத்தில் அமைதியும் புத்துணர்ச்சியும் பெற உகந்த இடம்
  • ஸ்ரீ கோவிலகம் என்ற அரசபாரம்பரியத்தில், 3500   சதுர அடியில், சரித்திரம் கலாச்சாரம் ஆகிய இரண்டையும் கலந்த பின்னணியில்  கட்டப்பட்ட இந்த கேரள மாளிகை, நல்ல ஒய்வைத் தரும்  ஒரு தனிப்பட்ட விடுமுறை வாசஸ்தலமாகும்.
  • யோகாவும் தியானமும் : பிரத்யேகமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட யோகா பயிற்சியும் தியானமும் தேர்ச்சி பெற்றவர்களால் கற்றுத்தரப்படும்
  • இயற்கையான நடை பாதை : அருமையான இயற்கை மூலிகை  செடிகள் அடர்ந்த நடைபாதை, ராதா குஞ்ச என்ற ஏரியைப்பார்த்த  தோட்டம், பசுமடம் என பலதரப்பட்ட ஆச்சரியங்கள் வழிநெடுக உள்ளன 
  • சாதனா சத்சங்கம்: இங்கு ஒவ்வொரு நாளும் மன மகிழ்வுடன் சாதனா  யோகா மூச்சுப்பயிற்சி, தியானம்  எனத் துவங்கும். மாலை நேரத்தில்  மனம் இளைப்பாற  பஜனைகள் தியானம், ஆன்மீக  சொற்பொழிவு ஆகியவையும் உண்டு.

 

முழுமையான ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத பஞ்சகர்மா பிரத்யேகமான வழிமுறைகளை வகுத்துள்ளது. இவைகளை சேவக் என்று சொல்லக்கூடிய தன்னார்வத்தொண்டர்கள் அங்கு வரும் அன்பர்களுக்கு முழுமையாக வழங்குகின்றனர். எங்கள்  சேவகர்கள் தொடர்ந்து தியானம்   பிராணாயாமம்  சுதர்சனக் கிரியா செய்வதால், நேர்மறை உணர்வுகள், புத்துணர்ச்சி, உள்ளுணர்வு போன்ற நற்பண்புகளை  கொண்டவர்களாக உள்ளனர்.

இயற்கை அன்னையின் பரிசுத்தமான மடியில், உங்கள் உடல் மனம் ஆத்மா  என எல்லா நிலையிலும் முழுமையான மாற்றத்தை கொண்டுவர  ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேத பஞ்சகர்மா நிலையத்தில் நாங்கள் காத்திருக்கிறோம்

 

பஞ்சகர்மாவின் வசதிகளை விளக்கும் ஒளி நாடாவும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள  91 80 32721298, 919620211000    என்ற தொலை பேசி எண்களிலோ அல்லது   guestrelations@ssapd.org என்னும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ எங்களை அணுகலாம்.