புளி - இனிப்பும், புளிப்புமான கலவையைச் சுவையுங்களேன் !

புளி  - இனிப்பும், புளிப்புமான கலவையைச் சுவையுங்களேன் !

 

https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/styles/unity_carousel_inner/public/achievement_carousel_image/Tamarind.jpg?itok=DSWqOgX9

 

புளி - சத்துக்களின் உறைவிடம்.

 

தமர் ஹிந்தி [ Tamar hindhi ] அல்லது இந்திய நாட்டு பேரீச்சை- இதுவே பாரசீக நாட்ட வரும், அரேபியரும் புளிக்கு வழங்கிய பெயர். எளிதில் உடையக்கூடிய, ஆழ் சிவப்பு நிற [ Brown ] உறைக்குள் , சதைப் பற்று மிக்க  டார்டாரிக்  அமிலமும், பெக்டினும் நிறைந்த பழம் புளி ஆகும்.

 

பிற பெயர்கள்:

 

தாவர இயல் பெயர் -                                 Tamarindus indica 

 

ஆங்கிலப் பெயர் -                                     Tamarind 

 

சம்ஸ்க்ருதம் -                                            ஆம்லாகா

 

ஹிந்தி -                                                      இம்லி

 

பயன்கள்:

 

மஹாராஷ்ட்ரா, தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் , ரசம், சாம்பார், வத்த குழம்பு மற்றும் புளியோதரை ஆகிய உணவு தயாரிப்பில்,மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாக்கில் நீர் ஊறச் செய்யும் சாட் [ Chat ] வகைகள், புளி சட்னி இன்றி 

நிறைவு பெறாது. புளியம் பூக்களையும் உபயோகித்து, சுவை மிகுந்த  உணவுகளைத் தயாரிக்கலாம். புளியம் இலைகள் குளுமையானவை, பித்தத்தைப் போக்குபவை.

வயிற்றிலுள்ள புழுக்களை அழிக்கக்கூடியதும் ஆகும். மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த,இதன் இலைகள் பயன் படுத்தப்படுகின்றன. அதன் மரப்பட்டையோ கிருமி நாசினி.புளியம் பழத்தின் சதைப்பற்றுள்ள பகுதி , குளுமையானது,  மலமிளக்கி, மற்றும் கிருமிகளை அழிக்கக்கூடியது.  

 

தினசரி பயன்படுத்தும்  முறைகள் :

 

  • ஜீரணக் கோளாறு : இப்பழத்தின் சதைப்பற்றுள்ள பகுதியை நீரில் கரைத்து, உட்கொள்வ தன் மூலம்  - பித்த வாந்தி, மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பசியின்மை ஆகியவற்றினைப் போக்கலாம்.
  • ஸ்கர்வி: வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் நோய் . இதனால் தோலில் புள்ளிகள், கடற்பஞ்சு போன்ற மிருதுவான ஈறுகள், மியூகஸ் மெம்பிரே னில் இரத்தப் போக்கு ஆகியவை ஏற்படுகிறது.புளியின் விழுது இக் குறைபாட்டினைப் போக்க உதவுகிறது.
  • ஜல தோஷம் : புளியினைக் கரைத்து, மிளகுப்பொடி சேர்த்து,கொதிக்கச் செய்து, மிளகு ரசம் தயாரித்து உண்பது, தென்னிந்தியாவில் ஜலதோஷத்திற்கான சிறந்த மருந்து.இது மட்டுமின்றி ரசம் உணவின் முக்கிய அங்கமாகும்.
  • சீத பேதி :சீதபேதியைப் போக்க ,புளியினால் செய்யப்பட பானம் உதவுகிறது.
  • மூட்டுகளில் வீக்கம்: புளியம் இலைகளை அரைத்து ,வீங்கிய மூட்டுகளிலும், கணுக்காலிலும் கட்டுப்போட்டால்  வீக்கமும், வலியும் குறையும்.   

 

 

>>>>>>>>>>>>>>>>