நாடி பரீக்ஷை

நாடி பரீக்ஷை

 

நாடி பரிக்ஷை :நீங்கள் குணமடைய துல்லியமான ஆய்வு

நாடி பரிக்ஷை என்பது நாடித்  துடிப்பு மூலம் கண்டறியும்   பழங்கால ஆயுர்வேத நுட்ப மாகும். இதன் மூலம்  துல்லியமாக உடல், மன மற்றும் உணர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நோய்களை கண்டறிய முடியும். இது ஆரோக்கிய  பிரச்சினைகளுக்கு அறிகுறிகளை மட்டுமின்றி  மூல  காரணத்தை கண்டறிய  உதவும் அறிவியலாகும்.

ரேடியல் தமனி மீது பல்வேறு நிலைகளில் உள்ள துடிப்புகளின் அதிர்வெண்களை நாடி பரிக்ஷை  புரிந்துகொள்கிறது. நுட்பமான அதிர்வுகளை ஏழு வெவ்வேறு மட்டங்களில் செங்குத்தாக கீழ்நோக்கி புரிந்து கொண்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளை , உறுதிப் படுத்துகின்றது. நாடித்துடிப்பு ஆய்வு செய்யப் படும்போது , ​​நோயாளியின்  உடல் மற்றும் மனப்  பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது அவர்களின் முன்கணிப்புடன் சேர்ந்து அறிகுறிகளின்  வடிவில் விளக்கப் பட்டு,  காரணத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. இதனால், ஒரு நபரின் எந்தவொரு வியாதியையும் கண்டறிய முடிகிறது. கூடுதலாக, ஒரு தனித்துவமான ஆரோக்கிய மருந்துகள், தனிப்பயனாக்கப்பட்ட உணவுகள், உடற்பயிற்சி திட்டங்கள், கடுமையான நச்சு நீக்குதல்  மற்றும் வாழ்க்கைமுறை மாற்ற அனுபவங்கள் ஆகியவற்றிலிருந்து பெறும் மற்றும்  தனிப்பட்ட ஆரோக்கிய நலன்களைப் பாதுகாக்க உதவும் ஒரு அறிவியல் கருவியாக விளங்குகிறது.

உடலில் தோன்றும் தோஷம் அல்லது சமநிலையின்மையின் காரணமாகவே எந்தவித நோயும் ஏற்படுகிறது என்று காலங்காலமாக இருந்து வரும் பழமையான இயற்கை  வைத்திய முறைப்படி செயல்படும் ஆயுர்வேதம் கண்டறிகிறது. நல்ல உடல் நலத்தை அடைய  மற்றும் பராமரிக்க முக்கியமான தேவையென்னவெனில்  தோஷங்களை  சமநிலையுடனும் வைத்திருந்து உடல் அமைப்பை சமநிலைக்கு கொண்டு வருவதும் ஆகும். ஆயுர்வேத கோட்பாடுகள் நோய்களைக் கண்டறிந்து உடலுக்கு சமநிலையைத் தரும் இயற்கை வழிமுறையை பின்பற்றுகின்றன.

நாடி பரிக்ஷா ஆரம்பத்தில் 13 வது நூற்றாண்டில் சாரங்கதர் சம்ஹித புத்தகங்களில் நாடி மற்றும் மூன்று  தோஷங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தியது. பின்னர், அது 16 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பாவ்  மிஸ்ராஜியால் எழுதப்பட்ட 'பவ்பிரகாஷ் என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 17 ஆம் நூற்றாண்டில் யோகரத்நாகரில்  48 ஸ்லோகங்கள்  வழியாக நாடி பரிக்ஷையின்   முக்கியத்துவம் அதிகரித்தது. இந்த நூல் நாடி பரிக்ஷைக்கு  பொருத்தமான நேரம், வைத்திய முறை, அல்லது ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நோயாளிக்கு விதிகள் மற்றும் நாடி பரிக்ஷைக்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய விதிகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த நூல்களுடன் கூட மகரிஷி கனாடா, ராவணகிருதி நாடி விங்யான்   போன்றவர்களை உள்ளடக்கிய  பல அறிவுஜீவிகள், வைத்தியர்கள்  மற்றும் புனிதர்கள் ஆகியோரும் நாடி  அறிவியலைப் பற்றி எழுதியிருக் கின்றனர்.

ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத பஞ்சகர்மாவில் , நமது மருத்துவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த வர்களாக உள்ளனர். வாழும் கலை அறக்கட்டளையில் உள்ள அவர்களின் வாழ்க்கை முறையானது யோகா, தியானம், பிராணயாமம்  மற்றும் சக்தி மிகுந்த  சுதர்சனக்  கிரியா ஆகியவற்றுடன் கூடிய வழக்கமான நடைமுறையை கொண்டுள்ளது. இது அவர்களுக்கு ஆழமான உள்ளுணர்வு, அதிக கவனம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நாடி பரிக்ஷை நோயறிதலை அடிப்படையாக கொண்டு, எங்கள் மருத்துவர்கள் தனிப்பட்ட சிகிச்சை முறைகள்  மற்றும்  திட்டங்களை பரிந்துரைக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு சிறந்த பொருத்தமான உணவு மற்றும் வாழ்க்கை முறையையும்  பரிந்துரைக்கின்றனர்.

துல்லியமான கண்டறிதலுக்கான முக்கிய காரணங்கள்:

நாடி பரிசோதனைக்கு  சிறந்த நேரம்:

துல்லியமான துடிப்பு  காலம் மற்றும் நாளில்  தினமும் மாறுபடும் அனைத்து ரிஷிகள்  மற்றும் வைத்தியர்களால் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி என்னவெனில் நாடித் துடிப்பு ஒரு நாளில் அவ்வப்போது நேரத்திற்குத் தகுந்தாற்போன்று மாறுபடும்.

காலையில், கப நாடியும்,  மதிய வேளையில் பித்த நாடியும் மற்றும் மாலை நேரத்தில் வாத நாடியும்  முக்கியத்துவத்துடன்  இருக்கும். இவ்வாறு ஒரு நாளில் மாறுபடும் நாடி துடிப்பு வேறுபாடுகளை  நவீன அறிவியல்  இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆயுர்வேத அறிவியல் கிரக நடவடிக்கை தொடர்பான அதாவது நாடியின் மீது சூரியன் சந்திரன் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை விவரித்துக் கூறுகிறது.

நாடி சோதனைக்கு  முன்னதாகவே கடுமையான விதிமுறை பின்பற்றப் படுகிறது:

துல்லியமான ஆய்வு, காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுண்டு  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பரிந்துரைக்கப் படுகிறது. ஏனெனில் உணவு உண்ட பின்னர்  வளர்சிதை மாற்றம் ஏற்படுகையில் , நோயறிதல் செயல்முறை சிதைந்துவிடும்.

நோயாளியை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்:

நோயாளியின் உடல் நிலை பற்றி ஒரு மருத்துவர் அறிந்திருக்க வேண்டும். நோயாளியின் பொது நடத்தை, பழக்க வழக்கங்கள், முகபாவனை, காலநிலை நிலைமைகள், பசி, வலிமை, தூக்க இயல்பு  சுவாச முறை, வியாதிகளின் வரலாறு மற்றும் பல விஷயங்களை மருத்துவர் கவனிக்க வேண்டும். இந்த விஷயங்கள்  அனைத்தும் நோயாளியுடன்  விவாதிக்கப்பட்டு , பின்னர்  நாடி  மூலம் கண்டறிதலை உறுதிப்படுத்த வேண்டும்.

நாடி துடிப்பு பரிசோதனை முறை:

நோயாளியின் முழங்கை சற்று மடித்து கை சுலபமாகக் காட்டப் பட வேண்டும். மருத்துவரின் , வலது கையின் மூன்று விரல்கள், ஆள்காட்டி  விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல்  மெதுவாக ரேடியல் தமனி மீது தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி  விரல் சுலபமாக கட்டை விரல் அருகே வைக்கப்படுகிறது; மற்றும் மற்ற இரண்டு விரல்கள் அதற்கு அருகில் வைக்கப்படுகின்றன (கட்டைவிரல் மிக அதிகமாக நீட்டிக்கப்படக்கூடாது).

நாடி பரிக்ஷை ஆய்வில்  மூன்று விரல்களின் பயன்பாடு: 

ஒருவரின் நாடியைப் பரிக்ஷிக்க ஒரு விரலை விட மூன்று விரல்களின் பயன்பாடு மிக எளிதானதாக அமைகிறது. வலது கையின் கட்டை விரல் வேரில் ஆள்காட்டி விரல் வைக்கப் படும்போது வாதம், அதற்கடுத்து  நடுவிரல் வைக்கப்படுமிடத்தில் பித்தம் மோதிரவிரல் நுனியில் கபம் கண்டறியப் படுகிறது.

ஆயுர்வேதம் உடலின் இயற்கைத் தன்மையைத் தொந்தரவு செய்யாமல் ஆரோக்கியத்தை அளிக்கிறது. ஆயுர்வேத மருத்துவ முறைகள் மற்றும் நுட்பங்கள் எந்தப் பக்க விளைவு களையும் தராது. இதன் பயனாக உலகெங்குமுள்ள மக்கள் இந்தப் பழமையான அறிவியலின் உதவியுடன் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றனர்.