சீரகம் உங்கள் மருந்துப் பட்டியலில் முக்கியப் பங்கு வகிக்கட்டும்

சீரகம் உங்கள்  மருந்துப்  பட்டியலில்  முக்கியப் பங்கு வகிக்கட்டும்

 

 

உங்கள்   ஆரோக்கியத்தினை மணமுடையதாக்குங்கள் [ மேம்படுத்துங்கள் ]பல்லாயிரக்  கணக்கான வருடங்களாக இந்திய நாட்டில் சீரகத்தைப் பயன்படுத்தி உணவினை மணமாக்கி வருகிறார்கள்.  கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய நாட்டில் சீரகம் இருந்து வந்துள்ளது   எனக் கூறப்படுகிறது. எகிப்தியர்கள் தம் உணவை மணமாக்கவும், "மம்மி"  களைப்  பாதுகாக்கவும் - உபயோகித்து வந்தனர்.

பிற பெயர்கள்:

தாவர இயல் பெயர் :                       CuminumCyminum

ஆங்கிலம் :                                       Cumin

சம்ஸ்க்ருதம்                                      ஜீரகா

ஹிந்தி                                             ஜீரா

பயன்கள் :

ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்  பைபிளிலும் இடம் பெற்றுள்ளது.ஜீரகத்தில் இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவதுடன், புற்று நோயைத் தூண்டும் ஓர் காரணியை அழிக்கவல்ல குணமுடையதுமாகும்.இது தவிர, கால்சியம், மக்னீஷியம் ,பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் B1 மிகுந்து காணப்படுகிறது.அதன் பயன்பாடு சமையலுக்கு மட்டுமின்றி , மருத்துவத் துறையிலும், அழகு சாதனத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. ஜீரணத்தை மேம்படுத்து வதுடன், வயிற்றுப்போக்கினை போக்கவும், வாந்தியைத் தடுக்கவும்,முக்கியமாக கருவுற்ற சமயத்தில் ஏற்படும்  வாந்தியினைத் தவிர்க் கவும் பயன்படுகிறது. ஜீரகம் குளுமையை அளிக்க கூடியதாகையால்   வெயிற் காலத்தில் அதிக அளவில் உபயோகப்படுத்த வேண்டிய ஒரு பொருள்.

பயன்படுத்தும் வழி முறைகள் :

  • வயிற்று உப்புசம் : இஞ்சி, மிளகு, ஜீரகத்தினை சம அளவில் பொடி செய்து , நீரில் கொதிக்க  வைத்து, பால் சேர்த்து, ஒரு நாளில் இருமுறை பருகவும்.
  • உஷ்ணத்தினால் தோலில் ஏற்படும் தடிப்புகள்: தேங்காய்ப் பால் தயாரித்து, ஜீரகப் பொடியினைக் கலந்து, தடிப்புகள் இருக்கும் இடங்களில் தடவவும்.
  • தூக்கமின்மை : ஒரு வாழைப் பழத்தினை விழுதாகச் செய்து, ஒரு தேக்கரண்டி ஜீரகப் பொடியினைக் கலந்து, இரவில் உண்ணவும். சுகமான உறக்கம் பெறுவீர்.
  • மலச்சிக்கல் : ஜீரகம், இஞ்சி, மிளகு இவற்றினைப் பொடி செய்து,ஒரு கையளவு  கரு  வேப்பிலை  இலைகளையும், உப்பும் சேர்த்து பொடித்து, தினமும் சூடான சாதத்துடனும் , நெய்யுடனும்  கலந்து உண்ணவும்.
  • அமிலச் சுரப்பினால் அதிக உஷ்ணமும்,வாந்தியும்: மிளகு, ஜீரகம் , இஞ்சி மற்றும் மாதுளம் தோலினைச்  சம அளவில் பொடி  செய்து, அதனை தினமும் சாதத்துடனும், நெய்யுடனும் சேர்த்துச் சாப்பிடவும்.
  • சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் : ஜீரகத்தினை வெல்லத்தில் கலந்து உட்கொள்ளவும்.
  • பளபளக்கும் தோற்றத்திற்கு: ஜீரக கஷாயத்தினால் முகம் கழுவவும்.ஏதேனும் மரு அல்லது தழும்புகள்  இருப்பின் மறைந்து விடும்.
  • அஜீரணம் : மிளகு, ஜீரகத்தினைப் பொடி செய்து, மோரில் கலந்து, ஒரு நாளில்  மும்  முறை பருகி வர, குணம் பெறலாம்.

இக்கட்டுரை எழுதியவர்,  Dr. நிஷா மணிகண்டன் ; வாழும்  கலையின் மூத்த  ஆயுர்வேத ஆலோசகர்.

 

                                               ---------------------------------------------