உங்கள் எண்ணங்களை வெளி

ப்படுத்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய தியானம் எவ்வாறு உதவுகிறது.

நீங்கள் தினமும் இரவு உறங்கும் முன் எதை பற்றியாவது சிந்தீப்பீர்களா? அதைப்பற்றி கனவு காண்கிறீர்களா? ஆம் எனில் நீங்களும் இத்தகைய கனவுகளை உடையவர்களுள் ஒருவர் ஆவீர்கள். சில சமயங்களில் நமது சிந்தனையின் வெளிப்பாடாக கனவுகள் அமைகிறது. உங்கள் சிந்தனை நற்சிந்தனையானால் அது அருமை மேலும் கனவுகள் மெய்படும். தியானம் பயிற்சி செய்வதன் மூலம் மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளை அகற்றி நற் சிந்தனைகளை அளிக்கிறது.

உங்கள் கனவுகள் வாழ்க்கையில் மெய்படுமானால் எப்படி இருக்கும்? தியானப் பயிற்சி செய்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தினமும் தியானம் பயிற்சி செய்ய வேண்டும். இப்போது தியானம் பயிற்சி பற்றி அறிவோம்.

(1) உங்கள் ஆழ்மனதின் ஆற்றலை வெளிப்படுத் த தியானம் பயிற்சி எவ்வாறு உதவுகிறது.

உங்கள் வாழ்க்கையில் உங்களையோ அல்லது உங்கள் பிரச்சாரங்களையோ யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று எப்பொழுதாவது நீங்கள் நினைத்திருக்கலாம். இவ்வாறான சிந்தனைகளை சரிசெய்ய நீங்களே உங்களுக்கு தியானப் பயிற்சி செய்துகொள்ளுங்கள். தியானம் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதின் குரல் உங்களுக்கு தோழனாகிவிடும். உங்கள் ஆழ் மனதின் சக்திகளை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். அது உங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய தியானம் பயிற்சி உதவுகிறது. அது உங்களுக்கு துல்லியமான பதிலை எந்த ஒரு சூழ்நிலையிலும் அளிக்கும்.

(2). உங்களை நிகழ்காலத்திற்கு அழைத்து வருகிறது.

நிகழ்காலம் என்பது உண்மை. நீங்கள் தினமும் தியானம் செய்யும் பொழுது உங்களை நிகழ்காலத்திற்கு அழைத்து வருகிறது. உங்களின் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதை செயல் படுத்த தியானம் பயிற்சி உதவுகிறது. நாம் சில சமயங்களில் நடக்கும் போது அல்லது படிக்கும் போது அல்லது யாருடனாவது பேசும் போது நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது மேலும் சில சமயங்களில் நிகழ் காலத்திற்கு வருவதில்லை. சிந்தனைகள் சில சமயங்களில் வேறிடத்திற்கு செல்கிறது. அதேபோல் சில சமயங்களில் நமது இலக்கு அல்லது குறிக்கோள் ஓரிடத்தில் இருக்கும் ஆனால் உடனே செயல் படுத்த முடிவதில்லை. தியானம் செய்வதால் உங்களால் நினைத்த காரியத்தை உடனே செயல் படுத்த முடியும்.

(3). உங்கள் கனவுகள் மற்றும் குறிக்கோள், செயல்திறன் இவற்றை தியானம் ஊக்கப்படுத்தும்.

தியானப் பயிற்சி மிக துல்லியமான மற்றும் தெளிவான சிந்தனைகளை அளிக்கிறது. உங்கள் ஆழ்மனதின் ஆற்றலை அதிகரித்து உங்களுடைய குறிக்கோளை எளிதாக இயற்கை முறையில் அடைவதற்கு அல்லது நிறைவேற்ற தியானம் பயிற்சி மிகவும் உதவியாக உள்ளது. சில சமயங்களில் மன அழுத்தம் மற்றும் பின்னடைவு காரணமாக எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் போகலாம். சிறிதளவே முயற்சி செய்து விட்டு பின் தளர்ந்து போய் விடுகிறீர்கள். தியானப் பயிற்சியானது உங்கள் தன்னம்பிக்கை மை வலுவாக செய்து செயல் படுத்த உதவுகிறது. உங்கள் வாழ்க்கையில் எது உங்களுடையதோ அல்லது எது உங்களுக்கு உரிய வாழ்க்கையோ, அதை அடைய உதவுகிறது.

(4)- உங்கள் வாழ்க்கையில் பிறர் செய்யும் உதவிக்கு உங்கள் நன்றியை வெளிப்படுத்த உதவுகிறது.

நீங்கள் ஒருவர் செய்த நற்செயலுக்காக அவரை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் எப்படி தெரிவிப்பது என்று வெளிப்படுத்த முடியவில்லையா? தியானம் பயிற்சி உங்களுக்கு உதவும். நாம் அன்றாட வாழ்வில் பயன்பாடுகளை கண்டுபிடித்தவர்களை நாம் அதிகம் கவனிப்பது இல்லை. குழாயில் இருந்து வெளியே வரும் தண்ணீர், மின்சாரம் இது போன்ற வற்றை கண்டுபிடித்தவர்களை நாம் அதிகம் பாராட்ட வேண்டும். இந்த அரிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் உள்ள உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையை நாம் அதிகம் கவனிப்பது இல்லை. மேலும் நம் அன்றாட வாழ்வில் அன்பு, பாசம், பாதுகாப்பு அளித்தவர்கள் இப்படி பல விஷயங்களை நீங்கள் தினமும் பாராட்ட வேண்டும். பிறர் செய்யும் நற்செயலையும் தவறாமல் பாராட்ட வேண்டும். தியானப் பயிற்சியானது உங்களின் எல்லா வகையான வுணர்உகளை வெளிப்படுத்த உதவுகிறது. நீங்கள் உங்களிடம் இருப்பதை வைத்து கொண்டு நன்றியின் வெளிப்பாடாக வாழும் பொழுது, மற்றவை தானாகவே வந்து சேரும். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தியானப் பயிற்சியானது உங்களின் மூளையின் செயல்பாட்டை சரிசெய்ய உதவுகிறது.

(5)- உங்களுக்கு நற்சிந்தனை களை அளிக்கிறது.

சிலர் "நாம் இதனால் தான் இப்படி இருக்கிறேன்"என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறது, மேலும் நற் சிந்தனைகளை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறது. ஆனால் இப்பொழுது உள்ள வேகமான போட்டிகள் நிறைந்த இந்த காலத்தில் நாம் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. தியானப் பயிற்சியானது உங்களின் எல்லா வகையான வுணர்உகளை வெளிப்படுத்தி மேலும், உங்களுக்கு உள்ளே இருக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்தி, தேவைகளைப் செயல்படுத்த உதவுகிறது. உங்கள் வாழ்க்கையில் அனைவருடனும் அன்பு பாசம் இவைகளுடன் நீங்கள் இணைந்திருப்பது உணர்வீர்கள். இது உங்களை மகிழ்ச்சியின் சக்கிரத்தில் வைக்கிறது. தியானப் பயிற்சியானது உங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.

(6)- தேர்வு செய்ய பட்ட தியானப் பயிற்சி.(Guided meditation).

நீங்கள் தியானப் பயிற்சிக்கு புதியவரா? ஆம் எனில், நீங்கள் தேர்வு செய்ய பட்ட தியானப் பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் இரு வேளை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வெற்றி பெறலாம். உங்களின் துக்கங்களையும் மாற்றலாம். புதிய வாழ்வில் அடியெடுத்து வைப்பது போல உணர்வீர்கள். வாழ்க்கையில் புதிய பரிமாணத்தை உணர்வீர்கள். வாழ்க்கையில் உங்கள் தேவைகளை வெளிப்படுத்தி, செயல் படுத்த உதவுகிறது. "வாழும் கலை" நிறுவனத்தின் "சஹஜ் சமாதி" தியானப் பயிற்சியானது உங்களின் மூளையின் செயல்பாட்டை சரிசெய்ய உதவுகிறது. மேலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் செயல்திறன் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகிறது.